நளினி மகளுக்கு விசா: 6 வாரங்களில் பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறை வாசம் அனுபவித்து வரும் நளினியின் மகள், இந்தியாவுக்குவருவதற்காக விண்ணப்பித்துள்ள விசா மனுவை இன்னும் 6 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்தியஅரசின் குடியுரிமைத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நளினியும், அவரது கணவர் முருகனும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் முருகனுக்குத் தூக்குத் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது. இவரது கருணை மனு குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது.நளினி, முருகன் தம்பதியினரின் மகள் மேஹ்ரா, தற்போது இலங்கையில் அவரது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். தற்போது 13வயதாகும் மேஹ்ரா, தனது தாய், தந்தையைக் காண விரும்பி இந்தியா வருவதற்காக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில்விசா கோரி விண்ணப்பித்தார்.
ஆனால் விண்ணப்பம் கொடுத்துஒரு வருடம் ஆகியும் அதுகுறித்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் முடிவு எதுவும்எடுக்காமல் உள்ளது.. இதைத் தொடர்ந்து தனது மகளுக்கு விசா அளிக்க உத்தரவிடுமாறு கோரி நளினி சார்பில் சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி முருகேசன், மேஹ்ராவின் விசா விண்ணப்பத்தை இன்னும் 6 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவுஎடுக்க வேண்டும் என்று குடியுரிமைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications