உசிலம்பட்டியில் நடு ரோட்டில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை
Subscribe to Oneindia Tamil
உசிலம்பட்டி:
உசிலம்பட்டியில் வழக்கறிஞர் ஒருவர் பட்டப் பகலில் நடு ரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
உசிலம்பட்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வந்த குமரகுரு (35) இன்று காலை 9.30 மணியளவில் தனது 5 வயதுகுழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். மதுரை ரோட்டில் சென்றபோது எதிரில் வந்த வேன் பைக் மீது மோதியது.இதில் நிலை தடுமாறி விழுந்தனர் குமரகுருவும் குழந்தையும்.
இதையடுத்து வேனில் இருந்து இறங்கிய ஒரு கும்பல் குமரகுருவை சரமாரியாக வெட்டித் தள்ளியது. அதில் அந்த இடத்திலேயேகுமரகுரு இறந்தார். குழந்தையின் கண் எதிரிலேயே இந்தக் கொலை நடந்தது.
கீழே விழுந்ததில் படுகாயமடைந்த அந்தக் குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட குமரகுரு மாஜி அதிமுக எம்பி ஒருவரின் உறவினனராவார். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்தக் கொலைநடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பட்டப் பகலில் நடு ரோட்டில் நடந்த இக் கொலையால் உசிலம்பட்டியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications