போலி வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் பாய்ச்சல், பீதியில் அதிமுக

Subscribe to Oneindia Tamil

டெல்லி - சென்னை:

தமிழகத்தில் 13 லட்சம் போலி வாக்காளர்களைச் சேர்த்த அரசியல்வாதிகள் மீது (குறிப்பாக அதிமுகவினர் மற்றும் அமைச்சர்கள்)நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்று கேட்டு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுக்கு தலைமைத் தேர்தல்ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் தலைமையில்அதிமுகவினர் களமிறங்கி ஏராளமான போலி வாக்காளர்களைச் சேர்த்தனர். ஒரே நாளில் மட்டும் 3 லட்சம் பேரை கத்தைகத்தையாக பட்டியலில் சேர்த்தனர்.

மொத்தமாக 19 லட்சம் பேர் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இதில் பெரும்பான்மையானவை போலியானவை என்றும்அதிமுகவினரால் பட்டியலில் திணிக்கப்பட்டவை என்றும் எதிர்க் கட்சிகள் புகார் கூறின.

இதையடுத்து இந்தப் பெயர்களை தீவிரமாக பரிசீலித்து பின்னரே பட்டியலில் சேர்க்க தலைமைத் தேர்தல் ஆணையம்உத்தரவிட்டது. மேலும் டெல்லியில் இருந்து மூத்த அதிகாரிகள் வந்து இது குறித்து விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து புதிய விண்ணப்பங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது சுமார் 13 லட்சம் விண்ணப்பங்கள்போலியானவை என்று தெரிய வந்தது. 19 லட்சத்தில் 13 லட்சம் விண்ணப்பங்கள் போலியானவை என்று தெரியவந்தபோதுடெல்லி தேர்தல் கமிஷனே அதிர்ந்துவிட்டது.

இதன் பின்னணியில் அமைச்சர்களும் அதிமுகவினரும் இருப்பது வெட்ட வெளிச்சமாகிவிட்ட நிலையில், தவறு செய்தவர்கள் மீதுஇதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்காமல் நளுவி வந்தார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியான நரேஷ் குப்தா.

அதிமுகவினர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது என்று கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

இதையடுத்து லட்சணக்கணக்கில் போலி வாக்காளர்களை சேர்த்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது திமுக.

இந் நிலையில் குப்தாவுக்கு (தேர்தல் கமிஷனின் வேலையைப் பார்த்தாலும் இவர் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளஅதிகாரியாவார்) மத்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில்,

ஒரே நேரத்தில் 13 லட்சம் போலி வாக்காளர்களைச் சேர்க்க விண்ணப்பத்திவர்கள் யார் யார்?, இதன் பின்னணியில் தனி நபர்கள்,அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்டுள்ளார்களா?. இது தொடர்பான முழு விவரத்தையும் உடனே தேர்தல் கமிஷனுக்கு அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்கள் போலி என்று தெரிய வந்தவுடன் அதன் மீது நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்று கேட்டு இந்தநோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நோட்டீசால் ஆளும் தரப்பினர் மத்தியில் பீதி பரவியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+