நக்ஸல்கள் ஊடுருவல்: தமிழக காட்டுப் பகுதியில் அதிரடிப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரி காட்டுப் பகுதியில் பதுங்கியுள்ள நக்ஸலைட்டுகளைப் பிடிக்க தமிழக அதிரடிப் படையினர் தீவிர வேட்டையில்ஈடுபட்டுள்ளனர்.
நேற்றிரவு இந்தத் தேடுதல் வேட்டை தொடங்கியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தர்மபுரி, கிருஷ்ணகிரி,சேலம், ஈரோடு மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள காட்டுப் பகுதிகளில் இந்த வேட்டை நடந்து வருகிறது.வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடிப் படையினரும், காவல்துறையின் கமாண்டோ படையினரும் இந்தப் பணியில்ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் நக்ஸலைட்டுகள் மீது தடை விதிக்கப்பட்டதையடுத்து அவர்களை அம் மாநிலங்களின்போலீசார் தேடிப் பிடித்து கைது செய்து வருகின்றனர். இதையடுத்து நக்ஸல்கள் தமிழக காட்டுப் பகுதிகளில் ஊடுருவி வருவதாகதகவல்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து எல்லைப் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதையும் மீறி தமிழக காட்டுப்பகுதிகளுக்குள் ஊடுருவி பதுங்கியுள்ள நக்ஸல்களைப் பிடிக்க இப்போது அதிரடி ஆபரேசன் தொடங்கியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் இந்தத் தேடுதல் வேட்டை ஆரம்பமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications