அள்ளக் கைகள்: எஸ்ஜே சூர்யா மீது வழக்கறிஞர்கள் வழக்கு

Subscribe to Oneindia Tamil
SJ Surya

வழக்கறிஞர்களை அள்ளக் கைகள் (எடுபிடிகள்) என்று விமர்சித்ததாகக் கூறி இயக்குனர்-நடிகர் எஸ்.ஜே. சூர்யா மீது இன்னொருவழக்கு போடப்பட்டுள்ளது.

நியூ பட ஆபாச விவகாரம், சென்சார் போர்ட் அதிகாரி வானதி மீது செல்போன் வீசியது, வெட்டப்பட்ட காட்சிகளை படத்தில்சேர்த்தது என அடுத்தடுத்து வழக்கு, போலீஸ் விசாரணையை சந்தித்து வருகிறார் சூர்யா. கைதாகி இப்போது ஜாமீனில் இருக்கிறார்சூர்யா.

இந்தப் பரபரப்புகளால் சூர்யாவின் அடுத்த படமான அன்பே.. ஆருயிரேவுக்கு (அ.... ஆ...) நன்றாகவே இலவச விளம்பரம்கிடைத்துவிட்டது. படமும் நன்றாக இருப்பதால் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதிலும் ஆபாசம் நிறைந்துள்ளதாக ஒரு பக்கம் புகார் கிளம்பியிருந்தாலும் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் சூர்யா.

இந்தப் படத்தில் வில்லனுடன் மோதும் சூர்யா, வழக்கறிஞர் ஒருவரைப் பார்த்து நீ ஒரு அள்ளக் கை என்று பேசுவது போன்றவசனம் இடம் பெற்றுள்ளது. (மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எடுபிடி ஆசாமிகளைக் குறிப்பிட அள்ளக் கைகள்அல்லது அல்ஸ் என்று கூட செல்லமாக அழைப்பது வழக்கமாகி வருகிறது.) இப்போது இந்தக் காட்சிவிவகாரத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தக் காட்சியை எதிர்த்து எஸ்.ஜே. சூர்யா மீது புது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இந்தமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், அ.. ஆ.. படத்தில் வக்கீல்கள் எல்லாம் அள்ளக் கைகள் என்று கூறி வழக்கறிஞர்களை தகாத வார்த்தைகளால்சூர்யா திட்டியுள்ளார். எனவே அந்தக் காட்சியை நீக்கும் வரை படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி அருள்மொழிச் செல்வி, வரும் 30ம் தேதி சூர்யா, படத்தின் தயாரிப்பாளர், திருச்சியில்இந்தப் படம் ஓடும் தியேட்டரின் உரிமையாளர் ஆகிய மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

சூர்யாவை விடாது போலிருக்கிறது வழக்குகள்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+