கரையை கடந்தது ஹரிக்கேன் ரீடா: டெக்ஸாஸ்-லூசியானாவில் பெரும் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

மியாமி:

ஹரிக்கேன் ரீடா சூறாவளி இன்று மிக பயங்கர புயல் காற்று, மழையுடன் அமெரிக்காவின் டெக்ஸாஸ்-லூசியானாமாகாணங்களின் எல்லைப் பகுதியில் கரையைக் கடந்தது.

ஹரிக்கேன் கேத்ரினாவைத் தொடர்ந்து அமெரிக்காவின் தென் கிழக்குப் பகுதிகளை ஹரிக்கேன் ரீடா இன்று மிகக் கடுமையாகத்தாக்கியது. 195 கி.மீ. வேகத்தில் புயலின் மையப் பகுதி கரையைக் கடந்துள்ள நிலையில் அப் பகுதிகளை கன மழையும்,சூறாவளிக் காற்றும் சின்னாபின்னாபடுத்தி வருகின்றன.

அமெரிக்க நேரப்படி அதிகாலை 3.39 மணிக்கு (இந்திய நேரப்படி பகல் 1.09 மணிக்கு) டெக்ஸாசின் சபீனா பாஸ் அருகே ரீடாகரையைக் கடந்தது.

சாலையில் இருந்த தகவல் பலகைகள், வீடுகளின் கூரைகள், மரங்கள் ஆகியவை புயல் காற்றில் வாரி வீசப்பட்டன. பலஇடங்களின் மின் வினியோக மையங்களும் டிரான்ஸ்பார்மர்களும் வெடித்துச் சிதறின. இதனால் அந்தப் பகுதிகள் இருளில்மூழ்கியுள்ளன. கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நேற்று காலை வரை அபாய அளவில் 4 என்ற அளவில் இருந்த ஹரிக்கேன் ரீடாவின் வேகம் பின்னர் (அமெரிக்க நேரப்படிஇரவில்) கொஞ்சம் தணிந்தது. மணிக்கு 195 கி.மீ வேகத்தில் மெக்சிக்கோ வளைகுடா பகுதியை நோக்கி ரீடா முன்னேறியது.

டெக்ஸாஸ்-லூசியானா பகுதியில் ரீடா கரையைக் கடந்தது. இதனால் நியூ ஓர்லியன்ஸ், லூசியானா, கேல்வஸ்டன், லேக் சார்லஸ்,பியோமாண்ட் போன்ற பகுதிகள் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன.

இதில் நியூ ஓர்லியன்ஸ் தான் கடந்த இரு வாரங்களுக்கு முன் ஹரிக்கேன் கேத்ரினாவால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.இப்போதும் இந்த மாகாணம் பெரும் சீற்றத்தை சந்தித்து வருகிறது.

ஹரிக்கேன் ரீடா முன்னேறி வந்த தகவலையடுத்து லட்சக்கணக்கான மக்கள் ஹூஸ்டன், நியூ ஓரிலியன்ஸ் மற்றும் கேல்வஸ்டன்மாகாணங்களில் இருந்து வெளியேறிவிட்டனர்.

இதில் கேல்வஸ்டன் பகுதியில் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நியூ ஓர்லியன்ஸ்சின் பல பகுதிகள் மீண்டும்வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. இங்கு வெள்ளத்தைக் கட்டுப்படுத்த போடப்பட்ட தடுப்புகள் அனைத்தும் உடைந்துவிட்டன.

சூறாவளியால் ஏற்படும் நிலைமைய சமாளிக்க ராணுவத்தினரையும் ஆயிரக்கணக்கில் களத்தில் இறக்கியுள்ளது அமெரிக்கா.ராணுவத்தின் வடக்கு மண்டல தலைமையகத்தில் முகாமிட்டுள்ள அதிபர் ஜார்ஜ் புஷ், மீட்புப் பணிகளை நேரில் கண்காணித்துவருகிறார்.

இந்தப் புயல் காற்றால் 10க்கும் மேற்பட்ட அமெரிக்காவின் முக்கிய பெட்ரோலிய எண்ணெய்க் கிணறுகள் மூடப்பட்டுவிட்டன.இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலையும் உயர்ந்துள்ளது.

முன்னதாக டெக்ஸாஸை விட்டு லட்சணக்கணக்கான மக்கள் ஆயிரக்கணக்கான கார்களில் வெளியேறியதால் சுமார் 150 கி.மீ.நீளத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இந்தக் கார்கள் 15 மணி நேரம் வரை காத்திருக்க நேரிட்டது.

ஹூஸ்டனைச் சேர்ந்த ஒரு மருத்துவமனையில் இருந்து வயது முதிந்த நோயாளிகளையும் மருத்துவர்களையும் ஏற்றிச் சென்றபேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 24 பேர் பலியாகிவிட்டனர். அந்தப் பேருந்தில் இருந்த ஆக்ஸிசன் சிலிண்டெர்கள் வெடித்ததில்இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.

கடும் புயல் காற்றால் பல இடங்களில் மின் கம்பங்கள் சரிந்து பல மாடிக் கட்டிடங்களில் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது. மேலும் 6மீட்டர் வரையிலும் கடல் அலைகள் உயர்ந்து பீதியை ஏற்படுத்தி வருகின்றன.

ரீடாவால் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள கேவல்ஸ்டன் நகரில் இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச்சூறாவளியால் ஹூஸ்டனுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றாலும் புயல் காற்றில் வாரிச் செல்லப்பட்டமரங்கள் ஹூஸ்டனின் வெளிப் பகுதிகளில் போய் விழுந்தன.

கரையைக் கடந்துவிட்டதால் இந்தச் சூறாவளியின் வேகம் விரைவிலேயே தணிந்துவிடும் என வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது.

இந்தச் சூறாவளியில் இருந்து தப்ப ஹூஸ்டனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மட்டும் 10 லட்சம் பேர் வெளியேறிவிட்டனர்குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+