வைகோ நடத்தும் வாலிபால் போட்டிகள்
Subscribe to Oneindia Tamil
சங்கரன்கோவில்:
கலிங்கப்பட்டியில் மாநில அளவிலான வாலிபால் போட்டிகளை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ துவக்கி வைத்தார்.
தனது பாட்டனாரின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள வையாபுரியார் நினைவு வாலிபால் போட்டிகளை வைகோ தனது சொந்தஊரான கலிங்கப்பட்டியில் துவக்கி வைத்தார்.மாநில அளவிலான இந்த மின்னொளி வாலிபால் போட்டிகளை பந்தை அடித்து துவக்கி வைத்தார் வைகோ. இப் போட்டிகளில்இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஐசிஎப், தென்னக ரயில்வே, இந்தியன் வங்கி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
போட்டிகளைத் துவக்கி வைத்து வைகோ பேசுகையில்,
பிறந்த கிராமத்தில் மாநில அளவிலான இந்தப் போட்டியை நடத்த ஆசைப்பட்டேன். இதற்காக ஓராண்டு காலம் பாடுபட்டேன்.இந்தக் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மத்தியில் விளையாட்டில் ஆர்வத்தை ஊக்குவிக்கவே இந்தப் போட்டிகளுக்கு ஏற்பாடுசெய்தேன் என்றார்.












Click it and Unblock the Notifications