விஜய்காந்த் கட்சியில் சேரப் போகும் திமுக, பாமகவினர்: பண்ருட்டி தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக, பாமகவைச் சேர்ந்த பலர் விரைவில் விஜய்காந்தின் கட்சியில் சேரப் போவதாக சமீபத்தில் அக் கட்சியில் ஐக்கியமானபண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தில் சேர்ந்துள்ள மாஜி அதிமுக அமைச்சரான பண்ருட்டி ராமச்சந்திரன் விஜய்காந்தின் தீவிரஆலோசகராக மாறியுள்ளார்.

மதுரையில் மாநாடு நடத்திய விஜய்காந்த், தனது குடும்பத்துடன் அசோகா ஹோட்டலில் தங்கியிருக்க அருகில் உள்ள பாண்டியன்ஹோட்டலில் தங்கியிருந்தபடி விஜய்காந்துக்கு டைரக்சன்கள் தந்தபடி இருந்தார் பண்ருட்டியார்.

விரைவில் கட்சியின் அவைத் தலைவராக பண்ருட்டியை நியமிக்கவுள்ளார் விஜய்காந்த் என்கிறார்கள். வட மாவட்டங்களில்வலுவாக உள்ள பாமகவை சமாளிக்க வன்னியரான பண்ருட்டியார் தனக்கு உதவியாக இருப்பார் என விஜய்காந்த் கருதுகிறார்.

இந் நிலையில் விஜய்காந்தின் அரசியல் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது குறித்து ராமச்சந்திரன் அளித்த பேட்டி:

தே.மு.தி.கவில் நான் சேருவேன் என்று எனக்கே தெரியாது. மதுரை மாநாடு முடிந்த பின்னர் தான் விஜய்காந்தை முதன்முதலாகசந்தித்தேன் (!). என்னை கட்சியில் சேரச் சொன்னார். உடனே சேர்ந்துவிட்டேன் (!!).

திமுகவில் இருந்தபடியே அரசியல் கற்றார் எம்ஜிஆர். ஆனால், எந்தக் கட்சியிலும் இல்லாமலேயே அரசியலை நன்றாக புரிந்துகொண்டுவிட்டார் விஜய்காந்த். அவரிடம் பேசியபோது அவர் ஒரு சிறந்த அரசியல் தலைவர் என்பது புரிந்தது.

எம்ஜிஆருக்கு இருந்தது போல் எதையும் செய்து முடிக்கும் இளைஞர் பட்டாளமும் ஏழைத் தாய்மார்களின் ஆதரவும்விஜய்காந்துக்கு இருக்கிறது. எம்ஜிஆருக்குப் பின் நல்ல அரசியல் பக்கும் கொண்டவராக விஜய்காந்த் இருக்கிறார்.

விஜய்காந்த்தின் கட்சியில் சேர பல மாவட்டங்களைச் சேர்ந்த பல கட்சியின் ஆர்வம் காட்டி வருகின்றனர், முன் வந்து நிற்கின்றனர்.அவர்கள் யார் என்பதை இப்போது சொல்ல முடியாது.

திமுகவில் அதிருப்தியுடன் உள்ள பலர் விரைவில் எங்கள் கட்சியில் இணைவார்கள். அதே போல பாமகவைச் சேர்ந்த பலமாவட்டத் தலைவர்களும் விடுதலைச் சிறுத்தை அமைப்பைச் சேர்ந்தவர்களும் எங்கள் கட்சியில் சேர இருக்கிறார்கள்.

மக்கள் எங்களுக்கு வாய்ப்பு தந்தால் இன்னொரு எம்ஜிஆர் ஆட்சியை அமைத்துக் கொடுப்போம்.

இவ்வாறு கூறியுள்ளார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+