கற்பு விவகாரம்: கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டர் குஷ்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Kushboo

தமிழ்ப் பெண்களையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் புண்படுத்தும் விதத்தில் நான் கருத்து தெரிவித்திருந்தால் அதற்காக மன்னிப்புகேட்டுக் கொள்கிறேன் என்று நடிகை குஷ்பு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து இந்தியா டுடே வார இதழுக்கு குஷ்பு அளித்த பேட்டியால் தமிழகத்தில் பெரும் பரபரப்புஏற்பட்டுள்ளது. இந் நிலையில் குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றிருந்த குஷ்பு தனது பயணத்தை பாதியில் விட்டு விட்டுசென்னைக்குத் திரும்பியுள்ளார்.

சென்னை திரும்பிய அவர் ஜெயா டிவிக்கு அளித்த பேட்டியில்,

இந்தியா டுடே வார இதழுக்கு அளித்த பேட்டியால் இவ்வளவு பெரிய சர்ச்சை ஏற்படும் என்று நினைக்கவில்லை என்றுஅழுதவாறு கூறினார். கண்ணீருடன் அவர் அளித்த பேட்டியில்,

என்னை வாழ வைத்த தமிழ் மக்களோடு (இவரும் இந்த டயலாக்கை ஆரம்பித்துவிட்டார்) ஒருவராக ஒன்றி, தமிழ்ப்பெண்ணாகத்தான் நான் வாழ்ந்து வருகிறேன். தமிழர்களின் பண்பாடு, நாகரீகம், கலாச்சாரத்தை நான் நன்கு அறிவேன்.

Kushboo

தமிழ்ப் பெண்களுக்கு மாசு கற்பிக்க நான் ஒருபோதும் நினைத்ததில்லை. தமிழ்ப் படங்களில் கூட அப்படிப்பட்ட வேடங்களில்நான் நடித்ததில்லை. இந்தியா டுடே நடத்திய சர்வேயின் முடிவுகளின் அடிப்படையில் அதுகுறித்து நான் வேதனையுடன்தெரிவித்த கருத்துக்கள் அப் பத்திரிக்கையில் தவறாக வந்து விட்டது. (அப்படி போடு)

யாரையும் புண்படுத்துவதற்காக அப்படி நான் பேசவில்லை. இந்த விஷயம் இவ்வளவு பெரிய பிரச்சினையாக வரும் என்று நான்நினைக்கவில்லை. இப்பிரச்சினை வந்ததையடுத்து நான் சிங்கப்பூருக்கு தப்பி ஓடி விட்டதாக வெளியான தகவல் எனக்கு மிகவும்வேதனையைத் தருகிறது. 3 மாதத்திற்கு முன்பே திட்டமிட்ட பயணம் அது.

இந்த பிரச்சினை பெரிதானதும் உடனடியாக நான் பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னைக்கு வந்துள்ளேன். தமிழ்ப் பெண்கள்மீதும், மக்கள் மீதும், கலாச்சாரம் மீதும் நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்.

தமிழ்ப் பெண்களின் மனதைப் புண்படுத்தும்படி நான் பேசியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார் குஷ்பு அழுதவாரே.

சிங்கப்பூரிலும் எதிர்ப்பு: அதனால் ஓடி வந்தார்?

இதற்கிடையே, சிங்கப்பூரிலும் குஷ்புவுக்கு எதிரான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியதால்தான் அவர் தனது பயணத்தை ரத்துசெய்து விட்டு சென்னை திரும்பி விட்டார் என இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+