இமாம் அலியை எண்கெளன்டர் செய்த போலீசாருக்கு கொலை மிரட்டல்!
சென்னை:
தமிழக போலீஸ் படையால் பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி இமாம் அலியின் நினைவு தினத்தையொட்டி,அவரை எண்கெளன்டர் செய்த போலீசாருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து அந்த போலீசாருக்கு பலத்தபாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய இமாம் அலி, ஹைதர் அலி மற்றும் அவர்களது முக்கியகூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். கடந்த 2002ம் ஆண்டில் இமாமும் ஹைதரும் சென்னையில் இருந்து பாளையங்கோட்டைசிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். திருமங்கலம் காவல் நிலையத்தின் வெளியே அவர்களை வேனில் விட்டுவிட்டு போலீசார்பிரியாணி திங்கப் போய்விட்டனர்.அப்போது, போலீஸ் காவலில் இருந்து இந்த இருவரையும் அல்-உம்மா தீவிரவாதிகள் காப்பாற்றிக் கொண்டு சென்றனர்.
இதில் ஹைதர் அலி அடுத்த சில நாட்களிலேயே சிவகங்கையில் வைத்துப் பிடிபட்டார். அவரே சரணடைந்துவிட்டதாகவும்கூறப்பட்டது.
ஆனால், இமாம் அலி தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டன. தீவிர விசாரணையில்அவர் பெங்களூரில் 4 கூட்டாளிகளுடன் தங்கியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மதுரையில் துணை கமிஷ்னராக இருந்த ஷகீல் அக்தர் தலைமையிலான தனிப் படை அதே ஆண்டில் செப்டம்பர்29ம் தேதி அதிகாலையில் இமாம் அலி தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தது. வீட்டுக்குள் வைத்தே இமாம் அலியை போலீஸ்டீம் சுட்டுக் கொன்றது.
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இமாம் அலி சுட்டுக் கொல்லப்பட்ட தினத்தன்று போலீசாருக்கு மிரட்டல் விடுத்துகடிதங்கள் வர ஆரம்பித்தன.
இப்போது மூன்றாமாண்டு நினைவு தினம் வரவுள்ள நிலையில், தமிழக டிஜிபிக்கு முஸ்லீம் ஆயுதப்படை என்ற தலைமறைவுஇயக்கத்தின் பெயரில் ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்த 3 பக்கக் கடிதத்தில், இமாம் அலியை சுட்டுக் கொன்ற போலீஸ்படையில் இடம் பெற்றவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சில இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து எண்கெளன்டர் செய்த டீமில் இடம் பெற்ற போலீசாருக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களதுவீடுகளுக்கும் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
அதே போல மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் போலீசாரின் கண்காணிப்பும்தீவிரமாக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை, மதுரை சிறைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை, தென்காசி உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை இஸ்மாயில்புரம் உள்ளிட்டபகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இமாம் அலியின் உடல் புதைக்கப்பட்ட மதுரை நெல்பேட்டை பள்ளிவாசலில் பகுதியில் ரகசிய போலீசார் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அலியின் சமாதிக்கு யாராவது வந்து போகிறார்களா என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications