ஓகேனக்கல்: கர்நாடகம் மீது ஜெ. குற்றச்சாட்டு
சென்னை:
ஓகேனக்கல் அருவிப் பகுதியில் கர்நாடக அரசு தேவையற்ற சர்ச்சையில் ஈடுபட்டுள்ளது என்று முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஓகேனக்கல் பகுதியில் கர்நாடக அதிகாரிகள் தேவையற்ற பிரச்சினையில் ஈடுபட்டு வருவது குறித்து சட்டசயிைல்இன்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது முதல்வர் ஜெயலலிதா அவை விதி எண் 110ன் கீழ் ஒரு அறிக்கையைப்படித்தார்.அதன் விவரம்: தர்மபுரி மாவட்டம் ஓகேனக்கல் அருவிப் பகுதியில் தமிழக எல்லைக்குள் உள்ள பகுதியில் அரசின்சார்பில் சில வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட பகுதி கர்நாடகஎல்லைக்குள் உள்ளதாக அம் மாநில அரசு பிரச்சினை எழுப்பியது.
இதைத் தொடர்ந்து கடந்த 16ம் தேதி தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் தமிழக அதிகாரிகளும்,கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட கர்நாடக அதிகாரிகளும் சர்ச்சைக்குரிய இடத்தைப்பார்வையிட்டனர்.
இதைத் தொடர்ந்து 19ம் தேதியன்று இரு மாநில அலுவலர்களும், நில அளவையில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில்,சர்ச்சைக்குரிய பகுதி தமிழக எல்லைக்குள்தான் உள்ளது என்பது உறுதியானது.
இந் நிலையில், சாம்ராஜ் நகர் ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் கடந்த 20ம்தேதியன்று அங்கு சென்று வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று தமிழக அதிகாரிகளைஎச்சரித்துள்ளனர்.
மேலும் 25ம் தேதியன்று கர்நாடகத்தைச் சேர்ந்த சில அமைப்புகள் வேண்டும் என்றே அங்கு சென்று கர்நாடகநிலையை நிலை நிறுத்த முயன்றனர். ஆனால் வரைபடங்கள், உபயோகத்தின் அடிப்படையில், சர்ச்சைக்குரிய பகுதிதமிழகத்திற்குச் சொந்தமானதுதான் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் கர்நாடக அரசு அங்கு தேவையற்றை பிரச்சினையை எழுப்ப முயலுவது ஏன் என்று புரியவில்லை. இதைஅம்மாநில அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications