சுய நல உதவிக் குழுக்கள்!: கருணாநிதி கிண்டல் பிளஸ் கோபம்
சென்னை:
மகளிர் சுய உதவிக் குழுக்களின் பெயரை, அதிமுக தேர்தலுக்கான சுய நல உதவிக் குழுக்கள் என்று பெயர் மாற்றிவிடலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
மகளிர் சுய உதவிக் குழுவினரை அதிமுக தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. கடந்த மக்களவைத்தேர்தலிலும் இடைத் தேர்தல்களிலும் பெண்களை வீடு வீடாக சந்தித்து ஓட்டு கேட்பது போன்ற வேலைகளில்இந்தக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டனர்.இந்தக் குழுக்களை சமாளிக்க முடியாமல் திமுக கூட்டணிக் கட்சிகள் குழம்பி வருகின்றன.
இந் நிலையில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு இந்த அரசு போதிய நிதி ஒதுக்குவதில்லை. மாறாக, திமுகஆட்சியில் தொடங்கப்பட்டு, நாளும் வளர்ந்து வருகிற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மட்டும், தேர்தலைமனதில் கொண்டு ஏராளமான நிதியை ஒதுக்கி வருகிறது.
புதிய சுய உதவிக் குழுக்களை அமைக்கும் செலவுக்காக மட்டும் ரூ. 1.12 கோடியும், பயிற்சி செலவாக ரூ. 23.31கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மிகவும் வேதனையான விஷயம் இது.
சுய உதவிக் குழுக்களின் பெயரை பேசாமல் அதிமுக தேர்தலுக்கான சுய நல உதவிக் குழுக்கள் என்று மாற்றிவிடலாம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
முட்டாளாக்கும் அறிவிப்புகள்:
அவர் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில்,
நாளொரு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. தேர்தல் நெருங்கி வருவதால் இந்த அறிவிப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
ஆனால் இந்தத் திட்டங்களை நிறைவேற்றத் தேவையான நிதியாதாரம் குறித்துப் பலமுறை நாம் கேட்டும் அவர் அதைப் பற்றி வாய் திறக்காமல்உள்ளார். சட்டசபையில் துணை நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தபோதும் கூட அதிலும், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு ஏதும் இடம் பெறவில்லை.
ரூ. 820 கோடி செலவில் சாலை மேம்பாட்டுத் திட்டம் என்றார்கள். ஆனால் வெறும் ரூ. 200 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளார்கள். தினசரி ஒருஅறிவிப்பை வெளியிட்டு மக்களை சந்தோஷப்படுத்தி வருகிறது அரசு.
ஆனால் உண்மையில் மக்களை முட்டாளாக்கும் வகையிலான அறிவிப்புகள்தான் இவை என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications