விஜயகாந்த் ரசிகர்கள்- பாமக மோதல்
சேலம்:
சேலம் மாவட்டம் பாப்பம்பாடி என்ற இடத்தில் விஜயகாந்த் ரசிகர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சிதொண்டர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
இளம்பிள்ளை அருகே உள்ளது பாப்பம்பாடி கிராமம். இங்கு சில மாதங்களுக்கு முன் சுவர் விளம்பரம் எழுதுவதுதொடர்பாக பாமக மற்றும் விஜயகாந்த் மன்றத்தினருக்கு இடையே மோதல் மூண்டது. அதன் பின்னர் அமைதிஏற்பட்டது.இந் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாமக தொண்டர்கள் 2 பேரை விஜயகாந்த் ரசிகர்கள் தாக்கியதாககூறப்படுகிறது. இதையடுத்து பாமக சார்பில் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த விஜயகாந்த் ரசிகர்கள், ஆட்டோவில் சென்ற பாமகவினர் ஐந்து பேரை, வழிமறித்துசரமாரியாகத் தாக்கினர். இதில் அன்பழகன், சிவக்குமார், குமரேசன், பழனி, ராஜா ஆகிய ஐந்து பேரும்படுகாயமடைந்தனர்.
இந்தத் தகவல் பாமகவினரிடையே பரவியது. ஆத்திரமடைந்த அவர்கள், விஜயகாந்த் மன்ற ஒன்றிய செயலாளர்வெங்கடேசன் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த டிவி, பீரோ உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கிசேதப்படுத்தினர். மன்ற பேனரும் கிழிக்கப்பட்டது.
இதில் வெங்கடேசன், குழந்தை, சடையன் உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்த பாமகவினர் சேலம் மருத்துவமனையிலும், விஜயகாந்த் மன்றத்தில் இடைப்பாடி அரசுமருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த அடிதடி,மோதல் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 15பேர் மீது போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications