சேது: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
சேது சமுத்திரத் திட்டத்துக்குத் தடை கோரும் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்தியஅரசுக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.
சமூக நல அமைப்பைச் சேர்ந்த பெர்னாண்டஸ் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், சேது சமுத்திரத் திட்டத்தின்பலன்கள் குறித்து தவறான தகவல்கள் தரப்பட்டுள்ளன. மேலும் சர்வதேச, உள்நாட்டு சட்ட விதிகளை மீறி இத் திட்டம்நிறைவேற்றப்பட்டு வருகிறது.இத் திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து எந்தவிதமான விரிவான ஆய்வும் நடத்தப்படவில்லை. எனவே இத்திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சபர்வால், நீதிபதி தாக்கர், நீதிபதி கபாடியா ஆகியோர், மத்திய சுற்றுச்சூழல் துறை,மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை, திட்டத்தை நிறைவேற்றி வரும் தூத்துக்குடி துறைமுகக் கழகம், தமிழக அரசு ஆகியோருக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். 4 வாரத்தில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
திட்டத்துக்கு ஜெ மீண்டும் எதிர்ப்பு:
இதற்கிடையே இன்று சட்டசபையில் விவாதத்தின்போது பேசிய முதல்வர் ஜெயலலிதா,
மத்திய அரசின் திட்டங்களை நாங்கள் கண்மூடித்தனமாக எதிர்க்கவில்லை. சேது சமுத்திரத் திட்டத்தால் தமிழக மீனவர்களின்ஒட்டுமொத்த வாழ்க்கையே பாதிக்கப்படும் என்பதால் தான் அத் திட்டத்தை எதிர்க்கிறோம்.
சேது சமுத்திரத் திட்டப் பணிகள் தொடங்கியதில் இருந்து இறால் மீன்கள் கிடைப்பது குறைந்துவிட்டதாக மீனவர்கள் புகார்கூறுகின்றனர்.
இத் திட்டம் நிறைவேறினால் கப்பல்களுக்கு ஆகும் செலவு குறையும் என மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு கூறுவது தவறானதகவல். உண்மையில் செலவு கூடத்தான் செய்யும். சேது சமுத்திர கால்வாயை உபயோகிக்கும் கப்பல் உரிமையாளர்கள் அதற்காககட்டணம் செலுத்த வேண்டும், மேலும் கால்வாயில் வழிகாட்டும் கப்பல்களுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும். இதனால்அவர்களுக்கு செலவு தான் கூடும்.
அதே போல இந்தக் கால்வாயை பயன்படுத்தினால் பயண நேரம் குறையும் என்பதும் உண்மையல்ல. இந்தக் கால்வாயில்செல்லும் கப்பல்கள் மிக மெதுவாகவே பயணிக்க வேண்டி வரும். இதனால் எரிபொருள் செலவு தான் 5 மடங்கு அதிகரிக்கும்.
12 மீட்டர் மட்டுமே ஆழம் கொண்ட இந்தக் கால்வாயில் சிறிய கப்பல்கள் மட்டுமே செல்ல முடியும்.
இந்தத் திட்டம் தொடர்பாக பொது மக்களிடம் விவாதம் நடத்தப்படுவதற்கு முன்பே அந்த விவாத அறிக்கையை சமர்பிக்குமாறுமாநில சுற்றுச்சூழல் துறைக்கு உத்தரவு போடுகிறது மத்திய சுற்றுச்சூழல் துறை (இதன் அமைச்சர் திமுகவைச் சேர்ந்த ராஜா).
மேலும் மாநில சுற்றுச்சூழல் துறை தனது தடையில்லா சான்றிதழை வழங்குவதற்கு முன்பாகவே திட்டத்துக்கு அனுமதிதந்துவிட்டது மத்திய சுற்றுச்சூழல் துறை.
எங்கள் அரசு மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை. மத்திய அரசின் பல திட்டங்களுக்கு நாங்கள் ஆதரவு தந்துவருகிறோம் என்றார் ஜெயலலிதா.
முன்னதாக இன்னொரு விவாதத்தின்போது இடைமறித்துப் பேசிய ஜெயலலிதா, ஒரே வருடத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசல்விலைகளை 5 முறை உயர்த்தியுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அதே நேரத்தில் தமிழகத்தில் அவற்றின் விலையைக்குறைக்கும் வகையில் விற்பனை வரியைக் குறைக்க மறுத்துவிட்டார்.
அவர் கூறுகையில்,
சர்வதேச அளவில் பெட்ரோலிய எண்ணெய் விலை கூடும்போது எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தை மத்திய அரசு குறைக்கவேண்டும். ஒவ்வொரு முறை விலை ஏறும் போதும் இந்த நிறுவனங்களுக்கு பெரும் லாபம் கிடைக்கிறது.
பெட்ரோல், டீசலின் விலையைக் குறைக்க சுங்க வரியையோ, இறக்குமதி வரியையோ குறைக்க மத்திய அரசு தயாராக இல்லை.அப்படியிருக்கையில் நாங்கள் பெட்ரோல் மீதான விற்பனை வரியைக் குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூட்டணியில் உள்ளதமிழக கட்சிகள் கோருவது நியாயமற்றது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications