நீதிமன்றத்தில் குஷ்பு கொடும்பாவி எரிப்பு: வழக்கு ஒத்திவைப்பு
சென்னை:
சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்திற்குள் நடிகை குஷ்புவின் கொடும்பாவியை வழக்கறிஞர்கள் எரித்ததால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே குஷ்புவைத் தண்டிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை சென்னைஎழும்பூர் 14வது குற்றவியல் நீதிமன்றம் வரும் அக்டோபர் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டது.
தீபம் ஜெயக்குமார் என்ற பெண் வழக்கறிஞர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். ஒட்டுமொத்த தமிழ்க் கன்னிப் பெண்கள்குறித்தும் அவதூறாகப் பேசியுள்ள குஷ்புவை, இந்திய தண்டனைச் சட்டம் 499, 500வது பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும்என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுவைப் பரிசீலித்த நீதிபதி அதை ஏற்று வரும் அக்டோபர் 5ம்தேதி விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டார்.
இந் நிலையில் எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்கள் கூடி குஷ்புவுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.அப்போது குஷ்புவின் உருவ பொம்மையையும் அவர்கள் தீ வைத்து எரித்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து உருவபொம்மை மீது தண்ணீர் ஊற்றி தீயைஅணைத்தனர்.
இதற்கிடையே நடிகை குஷ்புவுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் பல இடங்களில் நடந்தது. தனக்குவேண்டிய ஒரு டிவியின் வாயிலாக மட்டும் மன்னிப்பு கேட்டுள்ள குஷ்பு, பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்றகோரிக்கை வலுத்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications