குஷ்பு: நடிகர் சங்கம் மெளனம் காப்பது ஏன்?- திருமா
சென்னை, கடலூர் - சேலம்:
தங்கர்பச்சான் விவகாரத்தை மட்டும் பெரிதுபடுத்திய நடிகர் சங்கம், குஷ்பு விவகாரத்தில் இதுவரை வாய்
திறக்காமல் இருப்பது ஏன்? என விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவன் கேள்விஎழுப்பியுள்ளார்.கடலூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
குஷ்பு வெளிப்படையாக மன்னிப்பு கேட்டதை வரவேற்கிறோம். ஆனால், இந்த விஷயத்தில் நடிகர் சங்கம் இதுவரை வாயேதிறக்காமல் மெளனம் சாதிப்பது ஏன்?
தங்கர்பச்சான் விவகாரத்தை மட்டும் பெரிதுபடுத்திய இந்த நடிகர் சங்கம், குஷ்பு விவகாரத்தில் வாய்
திறக்காமல் இருப்பது ஏன்?
தமிழ்நாட்டு இளைஞர்கள், பெண்களுக்கு நல்ல யோசனையை யார் சொன்னாலும் வரவேற்கலாம். ஆனால், கன்னித்தன்மைகுறித்தும் பாலியல் உறவுகளை எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்றும் சொல்ல வேண்டிய அவசியம்குஷ்புவுக்கு ஏன் வந்தது?
மேலை நாட்டு பாலியல் சீரழிவுகளை தமிழ்நாட்டில் எடுத்துச் சொல்லி அதை கடைபிடிக்கவும் சொன்ன குஷ்பு தமிழர்களைஇழிவுபடுத்திவிட்டார் என்றார்.
குஷ்புவுக்கு பாஜக கண்டனம்:
இதற்கிடையே குஷ்புவின் கருத்துக்கு பாஜகவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அக் கட்சியின மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன்சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில்,
மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் நல்ல கருத்துக்களைச் சொல்ல வேண்டும். முடியாவிட்டால் பேசாமல் சும்மா இருக்கவேண்டும். திருமணத்துக்கு முன் செக்ஸ் என்பது மேலை நாடுகளில் வழக்கமாக இருக்கலாம். இந்திய நாகரீகத்துக்கு அதுஉகந்தது அல்ல.
நமது கலாச்சாரத்தை உலகம் போற்றுகிறது. கற்பைப் போற்றும் தமிழகத்தில் ஏதோ புரட்சிகரமான கருத்தாக நினைத்துக் கொண்டுகுஷ்பு பேசியிருப்பது அவரது அறியாமையைத் தான் காட்டுகிறது. அவரது கருத்து பைத்தியக்காரத்தனமானது என்றார்.
கிளிசரின் கண்ணீர்: பாமக கருத்து
பாமக இளைஞர் அணியின் மாநிலத் தலைவர் இரா. அருள் சேலத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழ்ப் பெண்களின் கற்பைக் கேவலப்படுத்திய குஷ்புவை மன்னிக்கவே முடியாது. பெண்களின் கற்பைக் கொலை செய்தகுஷ்புவை மன்னித்தால் கொலையாளிக்கு மன்னிப்பு தந்தது போல் ஆகிவிடும். அவரை திரும்ப மும்பைக்கே அனுப்பிவிடவேண்டும்.
கற்பு குறித்த தனது கருத்தை உள்ளத்தில் இருந்து வாரிக் கொட்டிய குஷ்பு, இப்போது சும்மா உதட்டளவில் மன்னிப்பு கேட்கிறார்.நடிகையான அவர் கிளிசரின் கண்ணீர் வடித்துள்ளார் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications