சூசைட் பாயிண்டாகும் கோவை கலெக்டர் அலுவலகம்!!
கோவை:
கோவை கலெக்டர் அலுவலகம் மெல்ல மெல்ல சூசைட் பாயிண்டாக மாறி வருகிறது.
இந்த வளாகத்தில் தற்கொலைக்கு முயல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு கண்காணிப்பை அதிகரிக்கபோலீஸார் முடிவு செய்துள்ளனர். மேலும் அவசியமில்லாமல் பொது மக்கள் அங்கு நுழைவதைத் தடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் இங்கு குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடக்கிறது. கலெக்டர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்துக்கு வந்து தங்களது குறைகளைத் தெரிவிக்கபொது மக்கள் போட்டா போட்டி போடுவதுண்டு.
அப்படி வந்து வரிசையில் நின்று மனு கொடுத்தும் கூட நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதால், வெறுத்துப் போன பலர்மீண்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, குறை தீர்ப்பு நாளன்றே தற்கொலை செய்ய முயற்சித்து வருகின்றனர்.
இதைத் தவிர இந்தக் கூட்டத்தில் அனைத்து முக்கிய அதிகாரிகளும் இருப்பதால் அவர்களது கவனத்தை தங்களது பிரச்சனைகள்பக்கமாக ஈர்க்க மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்வதும் சகஜமாகி வருகிறது.
சில மாதங்களுக்கு முன் தன்னை ஜாதியைச் சொல்லித் திட்டி, அடித்த நபர் மீது புகார் கொடுத்தார் தலித் வாலிபர் ஒருவர். ஆனால்,அந்த நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து கோவை கலெக்டர் அலுவலகத்தில் தீக் குளித்து உயிர் நீத்தார்அந்த தலித் வாலிபர்.
மேலும் இருவர் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டனர்.
இந் நிலையில் நேற்று உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டுதற்கொலைக்கு முயன்றார். இவரது மகளை இரு வாரங்களுக்கு முன் ஒரு விலபர் கற்பழித்துள்ளார். அவர் மீது புகார் கொடுத்தும்கூட காக்கிச் சட்டைகள் நடவடிக்கை எடுக்காமல் தொந்தி வளர்ப்பு வேலையில் இருந்துள்ளனர்.
பல இடங்களில் புகார் கொடுத்தும் தனக்கு நியாயம் கிடைக்காததால் நொந்து போன அந்த ஏழை கூலித் தொழிலாளி கலெக்டர்அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். அவரை அங்கிருந்தவர்கள் தடுத்து காப்பாற்றிவிட்டனர்.
இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் பெரிய பைகளுடன் (மண்ணெண்ணெய் டின் அடங்கிய) நுழைய தடை விதிப்பதுகுறித்து யோசிக்கப்பட்டு வருகிறது.
அப்படியே மக்களின் குறைகளையும் முறையாக தீர்ப்பது குறித்தும் போலீசாரும் அதிகாரிகளும் யோசித்தால் நல்லது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications