சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்
சென்னை:
சாலைப் பணியாளர்கள் விவகாரம் தொடர்பாக சட்டசபையிலிருந்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் இன்று கூண்டோடுவெளியேற்றப்பட்டனர்.
தமிழக சட்டசபையில் திமுக உறுப்பினர் பொன்முடி நேற்று பேசுகையில், சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தரவேண்டும் என்று கோரினார். அப்போது பதில் அளித்த அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், திமுகவினருக்கு லஞ்சம் கொடுத்துத்தான் சாலைப் பணியாளர்கள் வேலைகளில் சேர்ந்தனர் என்றார்.இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் நிரூபிக்க வேண்டும் என அவர்கள்கூறினர்.
அமைச்சரின் கருத்துக்களுக்குப் பதில் அளிக்க அவர்கள் சபாநாயகர் காளிமுத்துவிடம் அனுமதி கோரினர். ஆனால் அவர்அனுமதிக்க மறுத்ததால் திமுக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
இந் நிலையில் இன்று காலை சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்தவுடன், நிதியமைச்சர் பொன்னையன் எழுந்து, அமைச்சர்பொள்ளாச்சி ஜெயராமன் நேற்று தெரிவித்த புகார் தொடர்பாக மேலும் விளக்கம் அளிக்க விரும்புகிறார். அதற்கு சபாநாயகர்அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். அதற்கு காளித்துவும் அனுமதி அளித்தார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆதாரம் இல்லாத புகார்களை அமைச்சர் ஜெயராமன் கூறி வருகிறார்.அவர் விளக்கம் அளிக்க அனுமதி தரப்பட்டால், பதில் அளிக்க தங்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்று அவர்கள் கோரினர்.ஆனால் காளிமுத்து அதை ஏற்கவில்லை.
இதையடுத்து சபாநாயகரின் இருக்கை முன் கூடிய திமுக உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். பதிலுக்குஅதிமுகவினரும் கத்த பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் மாறி மாறி கோஷமிட்டதால் அவையில் அமளி நிலவியது.
இந் நிலையில், திமுக உறுப்பினர்கள் அனைவரையும் கூண்டோடு வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு காளிமுத்துஉத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
சபாநாயகரின் போக்குக்குக் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அனைவரும்வெளிநடப்புச் செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications