வனத் துறையினருக்கு செல்போன், ஜீப், ரேஷன் பொருட்கள்: ஜெ. சலுகை
சென்னை:
காவல்துறையினருக்கு வழங்கப்படுவதைப் போலவே, வனத்துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் மானிய விலையில் உணவுப்பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதே போல வனச் சரகர்களுக்கு ஜீப்கள், செல்போன்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.சட்டசபையில் இன்று ஜெயலலிதா 110வது விதியின் கீழ் ஒரு அறிக்கையை வாசித்தார். அதன் விவரம்:
சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டு வீழ்த்தப்பட்ட பின்னர் அதிரடிப் படையினருக்கு வழங்கப்பட்டதைப் போல ரொக்கப் பரிசு,வீடு, பதவி உயர்வு உள்ளிட்டவை வனத்துறையினருக்கும் வழங்கப்பட்டது.
இதேபோல, காட்டுப் பகுதிகளில் பல்வேறு ஆபத்துக்களுக்கு மத்தியில் பணியில் ஈடுபடும் களப் பணியாளர்களுக்குஊக்குவிப்புத் திட்டம் ஒன்றும் அறிவிக்கப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.
அதன்படி, மானிய விலையில் வனத்துறை களப் பணியாளர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் உணவுப் பொருட்கள்வினியோகிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும், ஒரு குடும்பத்திற்குத் தலா 20 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை, 2 கிலோகோதுமை, 1 கிலோ பாமாயில் ஆகியவை 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும்.
4 கிலோ துவரம் பருப்பு, கிலோ ஒன்றுக்கு ரூ. 10 என்ற வீதத்திலும், நான்கு கிலோ உளுத்தம் பருப்பு கிலோ ஒன்றுக்கு ரூ. 3 என்றவிலையிலும், 3 கிலோ ரவா அல்லது மைதா கிலோ ரூ 3க்கும் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் 5,075 வனத்துறை குடும்பங்கள் பயன் பெறும்.
இதுதவிர வனப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சரகர்களுக்கு ஜீப்களும், அவற்றை ஓட்டுவதற்காக ஓட்டுனர் உரிமம் பெற்றவனக் காப்பாளர்களும் நியமிக்கப்படுவர். வனச் சரகர்களுக்கு செல்போன்களும் வழங்கப்படும் என்றார் ஜெயலலிதா.
தேர்தல் வருவதையொட்டி எல்லா துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பல்வேறு சலுகைகளை ஜெயலலிதா அறிவித்து வருவதுகுறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications