குஷ்பு: நடிகர் சங்கம் அவசர ஆலோசனை
![]() |
நடிகை குஷ்பு சர்ச்சை உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க நடிகர் சங்கத்தின் செயற்குழுக்கூட்டம் இன்று சென்னையில் அவசரமாகக் கூடுகிறது.
திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதில் தவறில்லை. தாங்கள் திருமணம் செய்யப் போகும்பெண் கன்னித்தன்மை கொண்டவளாக இருப்பாள் என்று எந்தப் படித்த ஆணும் நினைக்க மாட்டான் என்றுஇந்தியா டுடே வார இதழுக்கு குஷ்பு அளித்த பேட்டி பெரும் விவகாரமாக வெடித்துள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளது. ஜனநாயக ற்போக்குக்கழகம், பாமக ஆகியவையும் இப்பிரச்சினையில் குஷ்பு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், தமிழகத்தை விட்டுஅவர் வெளியேற்றப்பட வேண்டும் என்று கோரி போராட்டத்தில் குதித்துள்ளன.
மேலும் நடிகர் சங்க உறுப்பினர் பதவியில் இருந்து குஷ்புவை நீக்க வேண்டும் என்று கோரி வழக்கும்தொடரப்பட்டுள்ளது.
![]() |
கொடும்பாவி எரிப்பு, வீடு முன்பு ஆர்ப்பாட்டம், கோர்ட்டில் வழக்கு என குஷ்புவுக்கு நெருக்கடி முற்றியதால்அதிர்த்து போன அவர் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந் நிலையில் குஷ்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று கூடுகிறது.
நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், பொதுச் செயலாளர் சரத்குமார் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும்கூட்டத்தில் கலந்த கொள்கின்றனர். இக்கூட்டத்தில் நடிகர் சங்கம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் நடத்தியபோராட்டம், சங்கத்தின் மீது துடைப்பம், செருப்புகளை வீசியது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
நடிகர், நடிகைகள் விவகாரம் என்றால் உடனே மைக் இல்லாமலேயே மணிக்கணக்கில் பேசும் விஜய்காந்த்இதுவரை இந்த விவகாரத்தில் வாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தவிர தயாரிப்பாளர்கள் சங்கம் நடிக, நடிகையருக்கு சம்பளம் உள்ளிட்ட பல்வேறுவிஷயங்களில் போட்டுள்ள நிபந்தனைகள் குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?














Click it and Unblock the Notifications