பொன்.மாணிக்கவேல் மீதான வழக்கு: உச்சநீதிமன்றம் தடை
டெல்லி:
செங்கை கிழக்கு மாவட்ட முன்னாள் காவல்துறைக் கண்காணிப்பாளர் பொன். மாணிக்கவேல் மீதான வழக்குவிசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
செங்கை கிழக்கு மாவட்ட (இப்போது சென்னையுடன் இணைந்து விட்டது) காவல்துறைக் கண்காணிப்பாளராகபொன். மாணிக்கவேல் பணியாற்றியபோது, 3 விசாரணைக் கைதிகளை உத்தண்டி அருகே வைத்து போலீஸார்என்கவுண்டர் முறையில் சுட்டுக் கொன்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி கொல்லப்பட்ட இரண்டு பேரின் சகோதரியான பொம்மிஎன்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பொன். மாணிக்கவேல் தனிப்பட்ட பழியுணர்ச்சியின் காரணமாகவே 3 பேரையும் சுட்டுத் தள்ளி விட்டதாகபொம்மி குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே பொம்மி தரப்பைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்து,மனுவை வாபஸ் பெறச் சொல்லி சித்திரவதை செய்ததாகவும் புகார் கிளம்பியது.
இதனால் கடும் கோபமடைந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், டிஜிபி அலெக்சாண்டரை நீதிமன்றத்திற்குவரவழைத்து கடுமையாக கண்டித்தனர்.
இந் நிலையில் பொன். மாணிக்கவேல் மீதான புகாரை விசாரிக்குமாறு வடக்கு மண்டல ஐ.ஜி. ஜாங்கிட்டைஉயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. அவரும் விசாரணை நடத்தி வருகிறார்.
ஆனால், தான் எஸ்.பியாக இருந்தபோது ஜாங்கிட்டுக்கும், தனக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும்,எனவே அவர் என் மீதான புகாரை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி பொன்.மாணிக்கவேல், உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
ஆனால் உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து விட்டது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் மேல் முறையீடு செய்தார். மேலும், பொம்மி தொடர்ந்தவழக்குக்கும் இடைக்காலத் தடை விதிக்கக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சேமா, ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர், பொன். மாணிக்கவேல் மீதான வழக்குவிசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
சர்ச்சைகளுக்குப் பேர் போன பொன்.மாணிக்கவேல், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவர்என்பதால், அந்த செல்வாக்கின் அடிப்படையில் அடாவடியாக செயல்படுவதாக புகார்கள் உள்ளதுநினைவுகூறத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications