தமிழ் பண்பாட்டுக்கு ஆதரவான போராட்டம்- தங்கர்பச்சான்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகை குஷ்புவுக்கு எதிராக நடக்கும் போராட்டம், அவருக்கு எதிரானதாக நான் கருதவில்லை. இதை தமிழ்பண்பாட்டுக்கு ஆதரவான போராட்டமாகவே கருதுகிறேன் என்று இயக்குனர் தங்கர்பச்சான் கூறியுள்ளார்.

நடிகைகள் குறித்து தாறுமாறாகப் பேசப் போய் நடிகர் சங்கத்திற்கு வரவழைக்கப்பட்டு கடுமையாக ஏசப்பட்டார்தங்கர்பச்சான். அப்போது தங்கர்பச்சானை ஒருமையில் அழைத்து சகட்டு மேனிக்கு அவரைத் திட்டியவர் தான்இந்த குஷ்பு.

சம்பந்தப்பட்ட நடிகைகளே சும்மா இருந்த நிலையில் ஓவராகவே குதித்தார் குஷ்பு. தமிழ் ஆர்வலரான தங்கரைகுஷ்பு வரிந்து கட்டிக் கொண்டு விளாசித் தள்ளியதால் பல தமிழர் அமைப்புகள் கடுப்பாகின.

விடுதலைச் சிறுத்தைகள், தமிழர் அமைப்புகள் குஷ்புவைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டின. தொலைபேசியிலும்மிரட்டப்பட்டார் குஷ்பு.

இதுகுறித்து மூத்த நடிகையான மனோரமாவை அவர் அணுகியபோது, உன்னை யார் அப்படிக் குதிக்கச்சொன்னது? நாங்கள் எல்லாம் அமைதியாக இல்லையா? இப்போது மிரட்டுகிறார்கள், வைக்கிறார்கள் என்றால்நான் என்ன செய்வது என்று அவரும் திட்டினாராம்.

இந் நிலையில்தான் தங்கர்பச்சான் தரப்பினருக்கு ஆறுதல் தரும் வகையில் மகா சிக்கலில் சிக்கிக் கொண்டார்குஷ்பு. அப்போது தங்கர்பச்சான் இருந்த அதே நிலையில் இப்போது குஷ்பு இருக்கிறார்!. நேற்று அவர் ஜெயா டிவிமூலம் பகிரங்கமாக அழுதபடியே மன்னிப்பு கேட்டார்.

இதுகுறித்து முன்னாள் பாதிக்கப்பட்டவர் என்ற வகையில் தங்கரிடம் கருத்து கேட்டபோது,

இதில் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இது தனிப்பட்ட ஒரு நடிகைக்கு எதிரான போராட்டமாக நான்கருதவில்லை. தமிழ்ப் பண்பாட்டுக்கு ஆதரவான ஒரு போராட்டமாகவே கருதுகிறேன்.

இந்த நிலையில் இதற்கு மேல் நான் எதையும் சொல்ல விரும்பவில்லை என்று முடித்துக் கொண்டார்.

ஆனால் திரையுலகினர் குஷ்புவுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்துள்ளனர்.

குஷ்புவின் தீவிர ரசிகர்களில் ஒருவரான சத்யராஜ், காமெடியன் விவேக், சின்னத்தம்பி மூலம் குஷ்புவுக்கு பிரேக்கொடுத்த இயக்குனர் பி.வாசு உள்ளிட்ட பலரும் குஷ்பு சொன்னது தவறாகவே இருந்தாலும் நடிகர் சங்கத்தின் மீதுசெருப்பு வீசுவது, துடைப்பத்தை வீசுவது சரியல்ல என்று கண்டித்துள்ளனர்.

மொத்தத்தில் எப்படி இருந்த குஷ்பு இப்படி ஆகி விட்டாரே என்ற பரிதாபம், பச்சாதாபம்தான் தற்போது நடிக,நடிகையர் மத்தியில் உருவாகியுள்ளது.

இது கேப்டனுக்கு மிகப் பெரிய சறுக்கல் என்றும் கூறப்படுகிறது. காரணம், குஷ்புவை தனது கட்சியில் முக்கியப்பொறுப்பில் அமர்த்த அவர் முடிவெடுத்துள்ளார் என்று கூறப்பட்டது.

ஆனால் தமிழ்ப் பெண்கள் குறித்து தாறுமாறாகப் பேசி வாங்கிக் கட்டிக் கொண்டுள்ள குஷ்புவை எப்படி ஊர்ஊராக, அதுவும் கிராமம் கிராமமாக கூட்டிச் சென்று கட்சிக்கு ஆதரவு திரட்ட முடியும் என்று கேப்டன் தரப்புகவலையில் மூழ்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+