குஷ்பு விவகாரம்: விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து தீவிரம்
சென்னை:
குஷ்பு விவகாரத்தில், நடிகர் சங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் திரைத் துறையையே முடக்கிப் போடும் வகையில்பல திட்டங்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு காத்துக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கல்யாணமாகாத பெண்களின் கற்பு நிலை குறித்து கருத்து தெரிவிக்கப் போக, படாத பாடு பட்டு வருகிறார் குஷ்பு. யாருமேஎதிர்பார்க்காத அளவுக்கு தமிழகம் முழுவதும் குஷ்புவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.அரசியல் கட்சிகள் தங்களால் முடிந்த போராட்டங்களை நடத்தி குஷ்புவை கதிகலக்கி வரும் நிலையில், பொதுமக்கள் மத்தியிலும்குஷ்புவின் கருத்துக்கு பெரும் அதிருப்தி நிலவுகிறது. தங்கர்பச்சான் பேசியதைக் கடுமையாக கண்டித்த குஷ்புவா இப்படிஒட்டுமொத்த பெண்கள் குறித்தும் அவதூறாகப் பேசியது என்று பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் கொதித்துள்ளனர்.
தங்கர்பச்சான் பேசியது மிகவும் அநாகரீகமானது, ஆனால் அவர் குறிப்பிட்ட ஒரு துறையைச் சேர்ந்த (திரைத்துறை) பெண்களைமட்டுமே அவதூறாகப் பேசினார். ஆனால் குஷ்புவோ, ஒட்டுமொத்த தமிழக கன்னிப் பெண்களையுமே களங்கப்படுத்தி விட்டார்என்று பெண்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
இந் நிலையில், நடிகர் சங்க செயற்குழு இன்று சென்னையில் அவசரமாக கூடுகிறது. நடிகர் சங்க செயற்குழுவில் குஷ்பு ஒருஉறுப்பினராக உள்ளார். உடனடியாக அவரை அப்பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி நடிகர் சங்கத் தலைவர்விஜயகாந்த், பொதுச் செயலாளர் சரத்குமார் ஆகியோருக்கு கடிதம் மேல் கடிதங்கள் குவிந்து வருகின்றன.
பல்வேறு மகளிர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், குஷ்புவை உடனடியாக சங்க உறுப்பினர் பதவியிலிருந்தும், பிறபொறுப்புகளிலிருந்தும் நீக்க வேண்டும், அவரை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க உத்தரவிட வேண்டும் என்று கோரி கடிதங்களைஅனுப்பிக் கொண்டுள்ளனர்.
இந்தக் கடிதங்களின் அடிப்படையில் குஷ்பு மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து நடிகர் சங்கசெயற்குழுக் கூட்டத்தில் இன்று விரிவாக விவாதிக்கப்படுகிறது. அவரை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க நடிகர் சங்கம் முன்வராது என்று தெரிகிறது.
ஆனால் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து அவரை (வேறு வழியின்றி..) நடிகர் சங்கம் நீக்கலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, குஷ்பு விவகாரத்தை நடிகர் சங்கம் கையாளப் போவதை விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு மிகவும் உன்னிப்பாககவனித்து வருகிறது. தங்கர்பச்சான் விவகாரத்தில் காட்டிய வேகத்தில் பாதியையாவது நடிகர் சங்கம் காட்ட வேண்டும்.
அப்படி இல்லாமல் குஷ்புவை காப்பாற்றும் வகையில் நடிகர் சங்கத்தின் நடவடிக்கைகள் அமையுமானால் பிரச்சினையை மிகத்தீவிரமாக்கவும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
குஷ்பு விஷயத்தில் நடிகர் சங்கம் அலட்சியப் போக்கைக் கடைப்பிடித்தால், திரைப்பட படப்பிடிப்புகளை நடத்த விடாமல்தடுப்பது, குஷ்பு வீட்டை தொடர்ந்து முற்றுகையிடுவது, விஜயகாந்த்துக்கு எதிராக தீவிரமாக களம் இறங்குவது என பலதிட்டங்களை விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு வகுத்துள்ளதாக கூறப்பபடுகிறது.
செருப்பு, துடைப்பத்துடன் பெண்களை நூற்றுக்கணக்கில் திரட்டி போராட்டம் நடத்தி வரும் விடுதலைச் சிறுத்தை அமைப்புக்குதிரைத்துறையினர் தவிர மற்ற அமைப்புகள் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications