ஜெயலலிதா திருந்தவில்லை: வைகோ
ஈரோடு:
ஜெயலலிதா திருந்தி விட்டதாக நினைத்துவிடாதீர்கள் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
மதிமுகவின் தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் ஈரோட்டில் நடந்தது. ஈரோடு மாவட்டத்தின் சார்பில் ரூ. 51 லட்சம் வைகோவின் வழங்கப்பட்டது. அதில் வைகோ பேசியதாவது:ஈரோடும், காஞ்சியும் திராவிட இயக்கத்தின் இரு விழிகள். எந்தவிதமான தன்னலமும் இல்லாமல் மக்கள் இந்த இயக்கம் வளர வேண்டும் என்று ரூ. 51 லட்சததை வாரி வழங்கியிருக்கிறார்கள்.
தமிழகத்தில் ஜனநாயக சீர்குலைவு ஆட்சி நடக்கிறது. மக்களை ஏமாளிகள் என்று கருதி ஏதேதோ அறிவிக்கிறார்கள். ஜெயலலிதா திருந்தி விட்டதாக நினைத்துவிடாதீர்கள். தேர்தல் பயத்தில் அவர் வெளியிடும் அறிவிப்புகள் தான் சமீபத்தில் அவர் அறிவித்த சலுகைகள் எல்லாம்.
சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகளை மதிக்காமல் அகம்பாவம், ஆணவத்தோடு பேசுகிறார் ஜெயலலிதா. தனது பொறுப்பை அவர் உணராமல் பேசுகிறார். சென்னை பல்கலைக்கழகம் என்ற பெயரை மதராஸ் பல்கலைக்கழகம் என்று அறிவிக்கிறார்.
எதிர்ப்பு கிளம்பியவுடன் 24 மணி நேரத்தில் அதை வாபஸ் பெறுகிறார். தேர்தலில் படுதோல்வி கிடைக்கும் என்ற பயத்தால் தான் அறிவித்ததை வாபஸ் பெற்றார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைப் போல வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக தலைமையில் போட்டியிட்டு கருணாநிதியின் ஆட்சியை அமைப்போம். அதிமுகவை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications