உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் ஆரம்பம்
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரி வழக்கறிஞர்களில் ஒருபிரிவினரும், பெண் வழக்கறிஞர்களும் இன்று முதல் காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 42 ஆகும். மதுரையில் கிளை திறக்கப்பட்டவுடன், அங்கு 7 நீதிபதிகள்நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இதையும் சேர்த்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 49.ஆனால் இரு நீதிமன்றங்களையும் சேர்த்து மொத்தம் 23 பேர்தான் தற்போது பணியில் உள்ளனர். மொத்த எண்ணிக்கையில்பாதியளவு கூட நீதிபதிகள் இல்லாததால், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்காக தேங்கி நிற்கின்றன.
காலியாக உள்ள பணியிடங்களுக்கு உடனடியாக நீதிபதிகளை நியமிக்கக் கோரி சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றவழக்கறிஞர்கள் கடந்த 2 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக 17 நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந்துரைப் பட்டியலை தலைமை நீதிபதிமார்க்கண்டேய கட்ஜூ சமீபத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பினார்.
உச்ச நீதிமன்றம் அப்பட்டியலை இறுதி செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.
இருந்தும், இன்னும் புதிய நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்காமல் உள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் பாமக மற்றும் திமுகவின்இடையூறும், வலியுறுத்தல்களும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் நலவுவதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந் நிலையில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அதன் முதல் கட்டமாக என்.ஜி.ஆர். பிரசாத் தலைமையிலான வழக்கறிஞர் சங்கமும், உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர் சங்கம்இன்று போராட்டத்தில் குதித்தன.
இந்தப் போராட்டம் காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தின் 4 நீதிமன்றங்களைத் தவிர மற்ற நீதிமன்றங்களில் வழக்குவிசாரணைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. திங்கள்கிழமை முதல் மற்ற வழக்கறிஞர்களும் போராட்டத்தில் குதிக்கவுள்ளதால்உயர்நீதிமன்றப் பணிகள் முற்றிலும் முடங்கிவிடும் நிநலை உருவாகியுள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications