இமாம் அலி நினைவு நாள்: பலத்த பாதுகாப்பில் மதுரை!
மதுரை:
போலீஸ் எண்கெளன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட அல்-உம்மா தீவிரவாதி இமாம் அலியின் நினைவு தினத்தையொட்டிமதுரையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரை சிறையில் இருந்து தப்ப இமாம் அலியின் கூட்டாளிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்ததால் சிறையின் உள்ளேயும்வெளியேயும் ஆயுதம் ஏந்திய போலீசார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய இமாம் அலியும் அவரது கூட்டாளிகளும் 3 ஆண்டுகளுக்கு முன்செப்டம்பர் 29ம் தேதி பெங்களூரில் வைத்து தனிப் படை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களதுஉடல்கள்மதுரை நெல்பேட்டை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இமாம் அலியும் கூட்டாளிகளும் சுட்டுக் கொல்லப்பட்ட தினத்தன்று அவர்களதுஆதரவாளர்கள் வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்து வருகின்றனர்.
இவர்களது 3வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து அசம்பாவிதச் சம்பவங்கள்நிகழக் கூடும் என்று போலீஸார் எதிர்பார்ப்பதால், மதுரை முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
100க்கும் மேற்பட்ட இடங்களில் போலீஸார் துப்பாக்கிகள், கலவரத் தடுப்பு வாகனங்களுடன்குவிக்கப்பட்டுள்ளனர். மதுரை மத்திய சிறைச் சாலைக்கும் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மதுரை தவிர தென் மாவட்டங்களில் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications