சேலம் மாநகராட்சியில் குஷ்புவை கண்டித்து தீர்மானம்
சேலம்:
சேலம் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நடிகை குஷ்புவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குஷ்புவுக்கு எதிராக பல்வேறு தமிழர் அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன.
இந் நிலையில் சேலம் மாநகராட்சியில் குஷ்புவைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநகராட்சிக் கூட்டம்தொடங்கியதும், பெண் குலத்தையே இழிவுபடுத்திப் பேசிய குஷ்புவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுகஉறுப்பினர் கலையமுதன் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு மேயர் சுரேஷ்குமார் (அதிமுகவைச் சேர்ந்தவர்) அனுமதி தரவில்லை. மாநகராட்சிப் பணிகள் நிறைய உள்ளன, இதனால்இப்போது இந்த தேவையில்லாத தீர்மானம் கண்டிப்பாக தேவையா என்று அவர் கேட்டார்.
மேயரின் பேச்சுக்கு பெண் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது கவுன்சிலர் சாந்தி என்பவர் குஷ்புவைக் கண்டிக்கும் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். பெண் கவுன்சிலர்கள் மிகஆவேசமாக இருந்ததால் மேயர் அமைதியாகிவிட்டார்.
இதையடுத்து குஷ்புவை கண்டிக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
மக்கள் மன்றம் ஒன்றில் குஷ்புவுக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள முதல் கண்டனம் இதுவாகும்.
குஷ்பு மீது மேலும் ஒரு வழக்கு:
இதற்கிடையே சென்னை, திருச்சி, திருவண்ணாமலை நீதிமன்றங்களைத் தொடர்ந்து தாராபுரம் நீதிமன்றத்திலும் குஷ்புவுக்குஎதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தளவாய்ப்பட்டனத்தைச் சேர்ந்த சுமதி என்ற பூ வியாபாரம் செய்யும் பெண் குஷ்புமீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த மனு ஏற்கப்பட்டு, விசாரணை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கைத் தொடர்ந்த சுமதிவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications