ஸ்டிரைக்: வங்கி சேவைகள் பாதிப்பு: பஸ்கள் மீது கல்வீச்சு- திருப்பூருக்கு நஷ்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தனியார் மயமாக்கலைக் கண்டித்து மத்திய தொழிற் சங்கங்கள் அழைப்பு விடுத்த தேசிய அளவிலான ஸ்டிரைக் காரணமாகமத்திய அரசு அலுவலகங்கள், வங்கிப் பணிகள் முற்றிலும் முடங்கிப் போயின.

ஆனால் பேருந்து, ரயில் போக்குவரத்து மற்றும் மாநில அரசுப் பணிகளில் எந்தவிதப் பாதிப்பும் இல்லை.சென்னையில் மூனறு அரசு பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடந்தது. நகரில் பெரும்பாலான ஆட்டோக்கள்ஓடவில்லை.

ஸ்டிரைக் காரணமாக நாடு முழுவதும் பிஎஸ்என்எல் உள்பட பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவைகள்பெருமளவில் பாதிக்கப்பட்டன.

அதே போல விமான சேவைகளும் பாதிக்கப்பட்டன. கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆட்டோக்களும்பெருமளவில் போராட்டத்தில் பங்கேற்றன.

பல நகர்களில் விமானங்கள் வழக்கம்போல் இயங்கினாலும் ஆட்டோ, டாக்சிகள் இல்லாததால் பயணிகள் விமானநிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக கொல்கத்தாவில் ஆட்டோ, டாக்சி, பஸ்கள் முழுமையாகஇயங்காததால் விமானங்களில் வந்திறங்கிய பயணிகள் விமான நிலையங்களிலேயே முடங்கிப் போயினர்.

ஆனால், தமிழகத்தில் இந்த வேலை நிறுத்தத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. சென்னை விமான நிலையத்தின்சேவைகள் பாதிக்கப்படவில்லை. உள் நாட்டு, வெளி நாட்டு விமானங்கள் வழக்கம்போல் கிளம்பிச் சென்றன.

விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. விமான நிலையத்தின் தீயணைப்புப் படையினரும் வேலை நிறுத்தத்தில்ஈடுபட்டுள்ளதால், அந்தப் பணியில் விமானப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும் தமிழக அரசும் சில தீயணைப்பு வண்டிகளையும், ஆம்புலன்ஸ்களையும், ஊழியர்களையும் விமான நிலையத்துக்குஅனுப்பி வைத்தது.

பல்வேறு இடங்களில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைதுசெய்தனர். அம்பத்தூரில் 3 பஸ்கள் மீது தொழிற் சங்கத்தினர் கல் வீசித் தாக்கினர்.

மாநிலம் முழுவதும் முக்கிய சந்திப்புகள், இடங்களில் போலீசாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிந்தது.

கர்நாடகத்தில் இந்தப் போராட்டதால் பாதிப்பு ஏற்பட்டது. பெங்களூரில் கடும் மழை பெய்து வரும் நிலையில் பெரும்பாலானஆட்டோக்கள் இயங்காததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பல்வேறு தனியார் நிறுவனங்கள், சாப்ட்வேர் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.பெரும்பாலான நிறுவனங்களில் ஊழியர்களின் வருகை குறைந்த அளவிலேயே இருந்தது.

பெங்களூரில் இருந்து புறப்படும் பல்வேறு தனியார் விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. விமான நிலையஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பட்சத்தில் நிலைமையை சமாளிக்க இந்திய விமானப் படையின் பயிற்சிப் பிரிவுஎன்ஜினியர்கள் கிரவுண்ட் கன்ட்ரோல் உள்ளிட்ட விமான நிலையப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

கேரளத்தில் இந்த வேலை நிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது. யார் ஸ்டிரைக் அறிவிப்புவெளியிட்டாலும் கேரளத்தில் உடனே ஆதரவு கிடைத்துவிடுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

அம் மாநிலத்தில் பஸ்கள், ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்கவில்லை. வர்த்தக நிறுவனங்கள் முழு அளவில் மூடப்பட்டுள்ளன.பெரும்பாலான தனியார் வாகனங்களும் இயங்கவில்லை. அதே நேரத்தில் வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் விமானங்களின்சேவைகள் பாதிக்கப்படவில்லை.

டெல்லி, மும்பை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களிலும், மாநிலங்களிலும் வேலை நிறுத்தத்துக்கு ஓரளவுக்கு ஆதரவு கிடைத்து.

இடதுசாரிகள் ஆட்சி நடக்கும் மேற்கு வங்கத்தில் முழு அளவில் ஸ்டிரைக் நடந்தது.

வேலை நிறுத்தத்துக்கு திருப்பூரில் நல்ல ஆதரவு இருந்தது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் ஒரேநாளில் ரூ. 30 கோடியளவுக்கு இந்த நகரில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கோபிச்செட்டிப் பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு கைது செய்யப்பட்டார்.

கல்பாக்கம் அணு மின் நிலையத்தைச் சேர்ந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் மின் தயாரிப்புப் பணிபாதிக்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+