நாடு முழுவதும் 100 இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்ட்: சென்னையில் 4 அதிகாரிகள் சிக்கினர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாடு முழுவதும் லஞ்சத்தில் திளைத்து வரும் மூத்த மத்திய அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள், வெளிநாட்டில்இருந்து நிதியுதவி பெறும் என்.ஜி.ஓக்களின் அலுவலங்கள், மோடி ஜெராக்ஸ் நிறுவன அதிகாரிகளின் வீடுகள் உள்பட 100இடங்களில் இன்று அதிகாலை முதல் சிபிஐ அதிரடி ரெய்ட் நடத்தி வருகிறது. இதில் சென்னையில் நான்கு அதிகாரிகளின்வீடுகளும் அடக்கம்.

சென்னையில்...

சென்னையில் மத்திய கலால் துறையின் (சென்ட்ரல் எக்ஸைஸ்) உதவிக் கமிஷ்னராகப் பணியாற்றும் ராமசாமியின் ஆலந்தூர்வீட்டிலும், அலுவலகத்திலும் சிபிஐ சோதனை நடத்தியது.

அதே போல சுங்கத்துறையில் (கஸ்டம்ஸ்) கண்காணிப்பாளரான பாலசந்திரனின் ராஜா அண்ணாமலைபுரம் வீட்டிலும்,பிஎஸ்என்எல் மண்டல பொறியாளரின் வீட்டிலும், ரயில்வே தலைமைப் பொறியாளரின் சிபிஐ சோதனை நடத்தியது.

ரூ. 60 லட்சம் சிக்கியது:

இதில் ராமசாமியின் வீட்டில் ரூ. 60 லட்சம் ரொக்கப் பணம் சிக்கியது. மேலும் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களுக்கானஆவணங்கள் பிடிபட்டன. அவரது வங்கி லாக்கர்களைத் திறந்து சோதனையிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ. 50 லட்சம் சொத்து:

அதே போல பிஎஸ்என்எல் அதிகாரியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு வருமானத்தை மீறி ரூ. 50 முதல் ரூ. 60லட்சத்துக்கு சொத்து இருப்பது உறுதியானது. தற்போது ஆந்திராவில் பணியில் இருக்கிறார் இவர்.

சென்னையில் சிபிஐ இணை இயக்குனர் சவானி, எஸ்.பி. வெங்கட் ஆகியோர் தலைமையிலான டீம்கள் இந்த சோதனையில்ஈடுபட்டன.

ரூ. 1 கோடி பங்களா:

அதே போல வருமானத்தை மீறி சொத்து குவித்த மூத்த அதிகாரிகள் 100 பேரின் வீடுகளிலும் நாடு முழுவதும் ஒரே நேரத்தில்சிபிஐ ரெய்ட் நடத்திக் கொண்டுள்ளது.

பிகாரில் கண்டோன்மெண்ட் அதிகாரி மற்றும் என்ஜிஓ அமைப்பு உள்ளிட்ட இடங்களிலும், மும்பையில் வருமான வரித்துறைஅதிகாரியின் வீட்டிலும் (இவருக்கு ரூ. 1 கோடியில் பங்களா உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது), டெல்லியில் போலீஸ்இன்ஸ்பெக்டரின் வீடு உள்பட 15 இடங்களிலும், கொல்கத்தாவில் ஹோமியோபதி கல்லூரி இயக்குனர், பிஎஸ்என்எல்அதிகாரிகளின் வீடுகள், போதைத் தடுப்புத்துறை அதிகாரியின் வீடு உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனைகள் நடந்தன.

ரயில்வே, பிஎஸ்என்எல் அதிகாரிகள்:

கேரளாவில் திருவனந்தபுரம், கோட்டையத்தைச் சேர்ந்த ரயில்வே அதிகாரிகளின் வீடுகளிலும், ராஞ்சியில் பிஎஸ்என்எல்அதிகாரியின் வீட்டிலும், ஆந்திராவில் விசாகபட்டிணத்தில் ரயில்வே மூத்த அதிகாரியின் வீட்டிலும் சோதனை நடந்தது. இந்தரயில்வே அதிகாரி 12 ரயில்வே வேகன் பெட்டிகளை வெறும் ரூ. 54 லட்சத்துக்கு தனியார் நிறுவனத்துக்கு விற்று அதில் கொள்ளைலாபம் அடித்துள்ளார்.

இந்த அதிகாரிகளின் வீடுகள் தவிர, அவர்களது அலுவலகங்களும் சோதனைக்கு உள்ளாகியிருக்கின்றன.

மோடி ஜெராக்ஸ்:

அதே போல மத்திய அரசு நிறுவனங்களுக்கு ஜெராக்ஸ் மெஷின்களை கூடுதல் விலைக்கு விற்று ஊழல் செய்த, மோடி ஜெராக்ஸ்நிறுவனத்தின் அதிகாரிகளின் வீடுகள், அலுவலகத்திலும் சோதனை நடந்தது.

பஞ்சாபில் முன்னாள் அமைச்சர் நிர்மல் சிங்கின் வீட்டிலும் ஜார்க்கண்டில் சில இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

ரெய்ட் நடத்திய 2,000 அதிகாரிகள்:

நாடு முழுவதும் நடந்த இந்த ரெய்டில் சுமார் 2,000 சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டனர். சோதனை நடத்தப்பட்ட பெரும்பாலானவீடுகளில் இருந்து பல லட்சம் ரூபாய் ரொக்கம் பிடிபட்டுள்ளது. பல கோடிகள் மதிப்புள்ள சொத்துக்கள், வங்கிக் கணக்குகள்,சேமிப்புப் பத்திரங்கள், நகைகள் ஆகியவை பிடிபட்டுள்ளன.

இதுவரை நடத்தப்பட்ட ரெய்டின் அடிப்படையில் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாலை வரை நீடிக்கவுள்ள இந்தச்சோதனைகளின் இறுதியில் தான் மொத்தம் எத்தனை வழக்குகள் பதிவாகும் என்பது தெரிய வரும்.

கடந்த பிப்ரவரி, ஏப்ரல், ஜூன் மாதங்களிலும் இது போன்ற ரெய்டுகள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+