கோவையில் விமானத்தின் மீது மோதிய மயில்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை விமான நிலையத்திலிருந்து கிளம்பிய விமானத்தின் மீது மயில் மோதியதால் உடனடியாக அந்த விமானம் நிறுத்தப்பட்டது.கோவை விமான நிலையத்திலிருந்து மும்பைக்கு செல்ல தனியார் விமானம் கிளம்பியது. ரன்வேயில் விமானம் ஓடியபோது, அங்கு பறந்துவந்த ஒரு மயில் விமானத்தின் இறக்கை மீது மோதியது.
இதைத் தொடர்ந்து விமானம் கிளம்புவது தவிர்க்கப்பட்டு, ரன் வேயிலேயே நிறுத்தப்பட்டது.
மயில் மோதியதால் விமானத்தின் இறக்கைப் பகுதி லேசாக சேதமடைந்தது. அதை சரி செய்யும் பணி நடந்து வருகிறது.
இச் சம்பவத்தையடுத்து அந்த விமானம் ரத்து செய்யப்பட்டு வேறு விமானம் மூலம் அதிலிருந்த 70 பயணிகள் மும்பைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications