குஷ்புவை விடாது விரட்டும் வழக்குகள்
சென்னை:
நடிகை குஷ்புவைத் தண்டிக்கக் கோரி புதுக்கோட்டை மற்றும் வானூர் குற்றவியல் நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்துப் பேசிய குஷ்புவைத் தண்டிக்கக் கோரி ஏற்கனவே சென்னை எழும்பூர், திருச்சி, திருவண்ணாமலை,தாராபுரம் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந் நிலையில் மேலும் 2 நீதிமன்றங்களிலும் குஷ்புவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கைவிசாரணைக்கு ஏற்ற நீதிபதி தமிழரசி, அக்டோபர் 6ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
அதேபோல வானூர் குற்றவியல் நீதிமன்றத்தில் பாமக மாநில இளைஞர் சங்க துணைச் செயலாளர் முருக்கம் முனுசாமி என்பவர் மனுஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், தமிழ்ப் பண்பாட்டை கேவலப்படுத்தும் வகையில் பேசியுள்ள நடிகை குஷ்புவை தண்டிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
தாராபுரம் நகராட்சி கண்டன தீர்மானம்:
இதற்கிடையே ஈரோடு மாவட்டம் தாராபுரம் நகராட்சி மன்றக் கூட்டத்தில் குஷ்புவுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம்நிறைவேற்றப்பட்வுள்ளது.
முன்னதாக சேலம் மாநகராட்சியில் குஷ்புவுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து தாராபுரம் நகராட்சிக் கூட்டம் தலைவர் சாந்தி (பாஜக) தலைமையில் நடந்தது. அப்போது பெண் கவுன்சிலர்கள் சிலர்எழுந்து தமிழக பெண்களை குஷ்பு மிகவும் கேவலமாக பேசியுள்ளார். பெண்களின் மனதை இது கடுமையாக பாதித்துள்ளது.
குஷ்புவின் இந்த அநாகரீகப் பேச்சைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரினர். இதையடுத்துப் பேசிய தலைவர்சாந்தி, அடுத்த கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications