திருவண்ணாமலையில் முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாடு: பிரமாண்ட ஏற்பாடுகள்
திருவண்ணாமலை:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 3 நாள் பிரமாண்ட மாநாடு திருவண்ணாமலையில் இன்று தொடங்குகிறது.
தமிழகம் மற்றும் தென் மாநிலங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள், விமர்சகர்கள் என சகலதரப்பையும் சேர்ந்தவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.இதில் ஆயிரணக்கணக்கான பொது மக்களும் பங்கேற்கின்றனர்.
மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தன், கன்னட எழுத்தாளர்கள் யு.ஆர். அனந்தமூர்த்தி, சித்தலிங்கய்யா உள்ளிட்ட பிற மொழிஇலக்கியவாதிகளும் இந்த மாநாட்டுக்காக திருவண்ணாமலை வருகின்றனர்.
தமிழ் இலக்கியம் மற்றும் கலை குறித்த விரிவான விவாதங்கள் இந்த மாநாட்டில் எடுத்து வைக்கப்படவுள்ளது. தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர் சங்கத்தின் 300 கிளைகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு முழு இரவு கலாச்சார நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு பிரளயன் தலைமை தாங்குகிறார். திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, சேரன், நடிகர் நாசர் ஆகியோர் முக்கிய உரைநிகழ்த்தவுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை இயக்குனர் தங்கர்பச்சான் தலைமையில் பேரணியும் நடத்தப்படவுள்ளது. இதுதவிர பல்வேறு இசை மற்றும்நடனக் குழுக்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெறும். இவர்கள் கலந்து கொள்ளும் ஊர்வலமும் நடத்தப்படுகிறது. இதை இயக்குனர் பாலுமகேந்திரா தொடங்கி வைக்கிறார்.
தமிழ் கலாச்சாரம், தமிழ் இலக்கியம், தலித் இலக்கியம், பெண்ணீயம், இந்துத்துவா அரசியல் உள்ளிட்ட பல்வேறு சமூக, அரசியல்பிரச்சினைகள் குறித்து இந்த மூன்று நாள் மாநாட்டில் விரிவான விவாதங்கள் நடைபெறவுள்ளன.
மிகப் பெரிய அளவில் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆன்மீக மணம் கமழும் திருவண்ணாமலையில்புரட்சிகர இலக்கிய மணம் வீசிக் கொண்டிருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications