நடிகர் சங்கத்தில் நுழையும் திருமாவளவன், பழ.நெடுமாறன்: விஜய்காந்துக்கு செக்!
சென்னை:
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.சங்க உறுப்பினராகி விஜயகாந்த்திற்கு எதிராகவும், தமிழ் விரோத நடிகர், நடிகையர்களுக்கு எதிராகவும் செயல்பட அவர்தீர்மானித்துள்ளார்.
மேலும், தங்கர்பச்சானும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோரும் நடிகர் சங்க உறுப்பினராகப் போகிறார்கள்என்றும் கூறப்படுகிறது.தங்கர்பச்சான் விவகாரத்தைத் தொடர்ந்து திருமாவளவன் நடிகர் சங்கத்திற்கு எதிராக ஆவேசமாக செயல்பட்டு வருகிறார். தற்போது குஷ்புவிவகாரம் கையில் கிடைத்திருப்பதால், அதைப் பயன்படுத்தி நடிகர் சங்கத்தை ஆட்டம் காண வைத்து வருகிறார்.
நடிகர் சங்கத்திற்கு எதிராகவும், அதன் தலைவர் விஜயகாந்த்திற்கு எதிராகவும் தீவிரமாகப் போராடப் போவதாக அறிவித்துள்ள அவர்,அதிரடி ஆக்ஷன் ஒன்றையும் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசியல்வாதியாக மட்டுமே அறியப்பட்டு வரும் திருமாவளவன் தற்போது அன்புத்தோழி என்ற படத்தில் நடித்து வருகிறார். அதேபோல,வி.சி.குகநாதன் இயக்கும் கைதட்டத்தானா கைகள் என்ற படத்திற்கு வசனமும் எழுதுகிறார்.
இதுதவிர மக்கள் யுத்தம் என்ற தெலுங்கு டப்பிங் படத்திற்கும் திருமாவளவன் முன்னுரை எழுதித் தந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தானும் ஒரு நடிகன் என்ற அடிப்படையில் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர அவர் முடிவு செய்துள்ளார். விரைவில்உறுப்பினர் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து நடிகர் சங்கத்தில் கொடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
அதே போல தங்கர்பச்சான், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோரும் நடிகர் சங்க உறுப்பினராகப் போகிறார்கள்என்று தெரிகிறது.
இதுகுறித்து தங்கர்பச்சான் கூறுகையில், வெளியில் இருந்து பேசினால்தானே பிரச்சினை. நாங்கள் உள்ளேயே வருகிறோம். சிதம்பரத்தில்ஒரு அப்பாசாமி மூலம் நான் நடிகனாகி விட்டேன். பழ. நெடுமாறனும் ஒரு படத்தில் நடித்துள்ளார். எனவே அவரும் நடிகர்தான்.திருமாவளவனும் நடித்து வருகிறார். எனவே அவரும் நடிகர்தான்.
வெளியில் இருந்து பிரச்சினையைக் கிளப்பினால் அதை திசை திருப்புகிறார்கள். எனவே நடிகர் சங்க உறுப்பினராக உள்ளே வந்துபேசினால் என்ன செய்வார்கள்?. எனவேதான் நாங்கள் உறுப்பினர்களாகப் போகிறோம் என்றார்.
தென்னிந்திய நிடிகர் சங்கத்தில் நிர்வாகிகளாக உள்ள, தமிழைத் தாய் மொழியாக கொள்ளாத முக்கிய நடிக, நடிகையர் விவரத்தையும்திருமாவளவன் தரப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
விஜயகாந்த் (தாய்மொழி தெலுங்கு), நெப்போலியன் (தெலுங்கு), ராதாரவி (தெலுங்கு), ரேவதி (மலையாளம்) குஷ்பு (உருது).
அரசியல் தலைவராக உள்ள திருமாவளவன், உறுப்பினராவதை நடிகர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் எதிர்த்தால் அதை வைத்தேவிஜயகாந்த்தை சர்ச்சையில் இழுக்கவும் திருமாவளவன்-தங்கர்பச்சான் தரப்பு முடிவு செய்துள்ளது.
காரணம், விஜயகாந்த்தும் தற்போது ஒரு அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். மேலும், சரத்குமார், எஸ்.எஸ்.சந்திரன், ராதாரவி,நெப்போலியன் போன்றோரும் அரசியல் கட்சிகளில் இரக்கிறொர்கள்.
கார்த்திக்கும் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகிறார். எனவே ஏகப்பட்ட அரசியல்வாதிகளைக் கொண்டுள்ள நடிகர் சங்கத்தில், நான்மட்டும் உறுப்பினராகக் கூடாதா என்று கேள்வி எழுப்பவும் திருமாவளவன் திட்டமிட்டுள்ளார்.
அதையும் மீறி எதிர்ப்பு வந்தால் நீதிமன்றத்தை நாடவும் அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே குஷ்பு விவகாரம் தொடர்பாக தங்கர்பச்சான் மீண்டும் காட்டமாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், தமிழர்களின் கலாச்சாரத்தைத்தான் எனது படங்களில் தொடர்ந்து கூறி வருகிறேன். பணத்துக்காக மட்டுமேசினிமாவுக்கு வருவதைத்தான் நான் விமர்சித்தேன். கலை மீது காதல் இல்லாமல் சமூகப் பொறுப்பும் இல்லாமல் நடந்து கொள்ளக் கூடாதுஎன்ற அர்த்தத்தில்தான் நான் அவ்வாறு கூறினேன்.
ஆனால் அதை சிலர் தவறாகப் புரிந்து கொண்டார்கள். நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்கள். நானும் தயங்காமல் நடிகர் சங்கம்சென்று மன்னிப்பு கேட்டேன். பகிரங்கமாகவே நான் மன்னிப்பு கேட்டேன். அதில் எனக்கு எந்தத் தயக்கம் இல்லை.
அப்போது கூட்டத்தில் இருந்த குஷ்பு கொந்தளித்தார், ஆவேசப்பட்டார், என்னை சரமாரியாக விமர்சித்தார். இப்போது தமிழ்ப் பெண்கள்கற்பு இல்லாதவர்கள் என்று சொன்னது யார்? குஷ்பு விரித்த வலையில் அவரே இப்போத சிக்கிக் கொண்டார்.
எனக்கு ஒரு நீதி, குஷ்புவுக்கு ஒரு நீதியா? நான் என்ன சொன்னேன்?. தமிழ் சினிமாவில் இப்போது நடித்துக் கொண்டிருப்பவர்களுக்குத்தமிழும் தெரியவில்லை, தமிழர்களின் கலாச்சாரமும் புரியவில்லை. தமிழ் மீதும், மக்கள் மீதும் அவர்களுக்கு சற்றும் மரியாதையும் இல்லைஎன்றார் ஆவேசமாக.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications