சிபிஐ ரெய்ட்: 4 மத்திய அரசு அதிகாரிகள் கைது- சென்னை அதிகாரிகள் மீது வழக்கு
டெல்லி:
நாடு முழுவதும் நேற்று 198 இடங்களில் ரெய்ட் நடத்திய சிபிஐ அதிகாரிகள், வருமானத்தை மீறி சொத்துக் குவித்த 4 மத்திய அரசு மூத்தஅதிகாரிகளைக் கைது செய்துள்ளனர்.
மத்திய மனித வளத்துறையின் உருது மேம்பாட்டுத்துறைக்கான தேசிய கவுன்சிலின் இயக்குனர் ஹமீதுல்லா பட், தனது வருமானத்தையும்மீறி ரூ. 2 கோடிக்கு சொத்து குவித்திருப்பது உறுதியானதையடுத்து கைது செய்யப்பட்டார்.அதே போல டெல்லி மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரியான நரேஷ் சங்கர் தனது வருமானத்தை மீறி ரூ. 1 கேடிைக்கு சொத்துகுவித்துள்ளார். இவரது வீட்டில் ரூ. 2.9 லட்சம் பணம் பிடிபட்டது. இதையடுத்து இவரும் கைது செய்யப்பட்டார்.
மத்திய நலத்துறை அமைச்சகத்தின் மருந்துத்துறை கட்டுப்பாட்டு அதிகாரியா ஜானக் ராஜ் என்பவரும் ரூ. 1 கோடிக்கு சொத்து குவித்ததுஉறுதியானதால் கைது செய்யப்பட்டார்.
மேலும் மும்பை வருமான வரித்துறையின் மூத்த அதிகாரியான மீனாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தென்னக ரயில்வே துணைத் தலைமைப் பொறியாளர் மற்றும், சென்னை மத்திய கலால் துறையின் (சென்ட்ரல் எக்ஸைஸ்) உதவிக்கமிஷ்னர் ராமசாமி ஆகியோர் மீது வருமானத்தை மீறி சொத்து குவித்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இவர்களது வங்கி லாக்கர்கள் சோதனையிடப்படவுள்ளன. இதன் பின்னரே இவர்களைக் கைது செய்வது குறித்து சிபிஐ முடிவு செய்யும்.இதில் ராமசாமியின் வீட்டில் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களுக்கான ஆவணங்கள் பிடிபட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications