கோவை, மதுரை, திருச்சியில் மைக்ரோசாப்ட் நிறுவன கிளைகள்: மாறன் முயற்சி
சென்னை:
கோவை மற்றும் மதுரை, திருச்சி ஆகிய நகர்களிலும் சாப்ட்வேர் அலுவலகங்களைத் திறக்குமாறு மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம்கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
சென்னையில் இந்திய தொழில் வர்த்தக சபையின் கூட்டத்தில் பேசிய மாறன்,ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா செல்போன் தயாரிப்பு ஆலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதன் முதல் கட்டப் பணிகள்அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் முடிவடைந்துவிடும்.
நோக்கியாவைத் தொடர்ந்து பிளக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் தனது எலெக்ட்ரானிக் கருவிகள் தயாரிப்பு ஆலையை ஸ்ரீபெரும்புதூரில்அமைக்கவுள்ளது.
என்னால் முடிந்தவரை தமிழகத்துக்கு தொழில்நுட்பத்துறை நிறுவன ஆலைகளை கொண்டு வந்து கொண்டிருக்கிறேன். இந்த விஷயத்தில்தமிழக அரசும் போதிய ஒத்துழைப்பு தர வேண்டும்.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொழிநுட்பத்துறை நிறுவனங்கள் பெருகி வருவதால் அப் பகுதியின் சாலைகளை மாநில அரசு விரைந்துமேம்படுத்த வேண்டும். அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளை பணிகளை எவ்வளவு வேகத்தில் முடியுமோ அவ்வளவு வேகத்தில் தமிழகஅரசு செய்து தர வேண்டும்.
இல்லாவிட்டால் வெளிநாட்டு மூலதனத்தை இழுப்பது கடினமாகிவிடும். வரும் டிசம்பரில் இந்தியா வரும் மைக்ரோசாப்ட் அதிபர்பில்கேட்ஸ் சென்னைக்கு வர ஒப்புக் கொண்டுள்ளார்.
சென்னை தவிர கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகர்களிலும் கிளைகளைத் திறக்குமாறு அந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் கோரிவருகிறேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications