ஜெயலட்சுமி, எஸ்.பி ராஜசேகரனுக்கு 7 ஆண்டு சிறை: திருச்சி சிறையில் அடைப்பு

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

Jayalakshmi

கூடுதல் எஸ்பி ராஜசேகரனின் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஜெகஜால ஜெயலட்சமிக்கு 7 வருட சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதே போல ராஜசேகரனுக்கு 7 வருட சிறை தண்டனையும், மனைவியைகொடுமைப்படுத்தியதற்காக தனியாக 3 வருட சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜெயலட்சுமியின் வலையில் வீழ்ந்த மற்றும் ஜெயலட்சுமியை வளைத்த 20க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் பட்டியலில்முக்கியமானவர் ராஜசேகரன்.

இவரது மனைவியின் பெயர் விசாலாட்சி. இவர்களுக்கு மனைவியும், பவித்ரா, திவ்யா ஆகிய மகள்கள் உள்ளனர். கல்லூரிக்குச்செல்லும் வயதுடைய மகள்கள் இருந்த நிலையில், ராஜசேகருக்கு ஜெயலட்சுமியுடன் தொடர்பு ஏற்பட்டது.

இதையடுத்து திண்டுக்கல் வேதாத்ரி நகரில் தனி வீடு பிடித்து ஜெயலட்சுமியுடன் குடித்தனம் நடத்தினார். டிஎஸ்பியின் மனைவிஎன்ற அந்தஸ்துடன் போலீஸ் கார்களில், போலீஸ் பாதுகாப்புடன் சுற்றி வந்தார் ஜெயலட்சுமி.

இதனால் இவரது முதல் மனைவி விசாலாட்சிக்கும் இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஜெயலட்சுமியுடனான தொடர்பை விலக்காவிட்டால் தற்கொலை செய்வேன் என்று மிரட்டிய விசாலாட்சியை, நீ செத்தா தான்நல்லது என்று ராஜசேகரன் தூற்றினார். இதையடுத்து ஆயுதப் படை குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் கடந்த 2001ம் ஆண்டுஅக்டோபர் 26ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் விசாலாட்சி.

ஆனால், விசாலாட்சிக்கு மனநிலை சரியில்லை என்று கூறி வழக்கை முடிக்கச் சொன்னார் ராஜசேகரன். அதன்படியே வழக்கைஊத்தி மூடினார்கள் காக்கிகள்.

Jayalakshmi with Rajasekar

ஜெயலட்சுமியும் ராஜசேகரனும் கடற்கரையில் கும்மாளம்

ஆனால், ஜெயலட்சுமி விவகாரம் வெடித்து அவருக்கும் போலீசாருக்கும் இடையிலான உறவுகள் அம்பலமானபோதுராஜசேகரனும் சிக்கினார். இதையடுத்து அவரது மனைவி தற்கொலை வழக்கை மீண்டும் தூசி தட்டி எடுத்தனர் போலீசார்.

இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ராஜசேகரனின் மகள்கள் உள்பட 36சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தற்கொலைக்குயைத் தூண்டி ராஜசேகரனுக்கும் அதற்குக் காரணமாக இருந்தஜெயலட்சுமிக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் கற்பூர சுந்தரம் தீர்ப்பளித்தார். மேலும் மனைவியைகொடுமைப்படுத்தியதற்காக ராஜசேகரனுக்கு தனியாக 3 வருட சிறை தண்டனையும் விதித்தார்.

அத்தோடு ராஜசேகரனுக்கு ரூ. 8,000மும், ஜெயலட்சுமிக்கு ரூ. 5,000மும் அபராதமும் விதித்தார்.

ராஜசேகரனையும் ஜெயலட்சுமியையும் திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும்திருச்சி மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

முதலில் ஜெயலட்சுமியுடன் மிக நெருக்கமாக வாழ்ந்து வந்த ராஜசேகரனுக்கும் ஜெயலட்சுமிக்கும் இடையே பின்னர் மோதல்மூண்டது. இதையடுத்து ஜெயலட்சுமி மீது விபச்சார வழக்கு போடச் செய்தார் ராஜசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+