திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள்: ராமதாஸ் முயற்சி
சென்னை:
திமுக கூட்டணியை விட்டு வெளியேற மாட்டேன் என்று மீண்டும் திட்டவட்டமாக அறிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ்,கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளையும் சேர்க்க முயற்சிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு சீட் ஒதுக்க கருணாநிதி மறுத்ததால், தனித்துப் போட்டியிட்டது அக்கட்சி. அதிலிருந்து திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார் வி.சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன்.இந் நிலையில் தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனின் முயற்சியால் ராமதாசும், திருமாவளவனும் இணைந்தனர். இதன்மூலம் வட மாவட்டங்களில் வன்னியர்-தலித்களுக்கி இடையே அவ்வப்போது நடந்து வந்த மோதல்கள் பெருமளவில்குறைந்தன.
இதைத் தொடர்ந்து மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், நெடுமாறன் ஆகியோருடன் இணைந்து தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்தை ஆரம்பித்தனர் ராமதாசும் திருமாவளவனும்.
இதில் சேதுராமன் தொடர்ந்து திமுகவை ஆதரித்து வருகிறார். இந் நிலையில் திமுக கூட்டணியில் இருந்து ராமதாஸ்வெளியேறுவார் என செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால், இவை உளவுப் பிரிவு போலீசார் உதவியுடன் அதிமுக பரப்பிவரும் செய்தி என ராமதாசும் கருணாநிதியும் கூறி வருகின்றனர்.
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,
திமுக தலைமையிலான கூட்டணியை விட்டு விலகும் பேசுக்கே இடமில்லை. சொல்லப் போனால் கூட்டணியை பலப்படுத்தும்வேலைகளில் நான் ஈடுபட்டுள்ளேன். வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளையும் சேர்த்துகூட்டணியை விரிவாக்க முயற்சித்து வருகிறேன்.
தமிழகத்தில் நிதி நிலை சீரடைந்துவிட்டதாக அமைச்சர்கள் வாய் கிழிய பேசுகிறார்கள். இந்த ஆண்டுக்கான மத்திய தணிக்கைத்துறை அதிகாரியின் அறிக்கையைப் பார்த்தால் உண்மை தெரியும். தமிழகத்தில் நிதி நிர்வாகம் மோசமாக உள்ளதை மிகத்தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளது அந்த அறிக்கை என்றார் ராமதாஸ்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications