ம.பியில் ரயில் விபத்து- 16 பேர் பலி: பிரேக் செயல்படாததால் கோரம்
தாதியா (ம.பி):
மத்தியப் பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் இருந்து குதித்து, ஓடி சிக்னல் அறை மீது மோதியதில் ஏற்பட்ட பயங்கரவிபத்தில் 16 பேர் பலியாயினர். மேலும் 60 பேர் காயமடைந்தனர்.
வாரணாசியில் இருந்து குவாலியர் சென்று கொண்டிருந்த அந்த பன்டேல்கண்ட் எக்ஸ்பிரஸ் இன்று காலை தாதியா ரயில்நிலையத்தைக் கடந்தபோது பிரேக்குகள் செயல்படவில்லை என ரயில் நிலையத்துக்கு டிரைவர் தகவல் தந்தார்.இந் நிலையில் தண்டவாளத்தை விட்டு அந்த ரயில் குதித்தது. தடம் விலகிய என்ஜினும் 6 பெட்டிகளும் பயங்கர வேகத்தில்சிக்னல் அறை மீது மோதின.
இதில் 16 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். மேலும் பலரது உடல்கள் நொறுங்கிய பெட்டிகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளதால், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடும், வீட்டில் ஒருவருக்கு வேலை வாய்ப்பும் தரப்படும் என ரயில்வேஅமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ரயில் நிலையத்தில் லூப் லைனின் சென்ற ரயில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் தான் சென்றிருக்க வேண்டும்.ஆனால், அது 90 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளது. இது டிரைவரின் தவறா அல்லது பிரேக் செயல்படாததால் இந்த வேகத்தில்டிரைவர் சென்றாரா என்பது விரிவான விசாரணையில் தான் தெரிய வரும்.
விபத்தில் ரயிலின் டிரைவரான ரம்ஸான் கான் என்பவரும் பலியாகிவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications