கலிபோர்னியா பல்கலையில் இந்திய இசைக்கு தனித்துறை
Subscribe to Oneindia Tamil
லாஸ் ஏன்ஜெல்ஸ்:
மகாத்மாவின் பிறந்த தினத்தையொட்டி அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இந்திய இசைக்கான தனித்துறைஉருவாக்கப்பட்டுள்ளது.இதுவரை சிறிய அளவில் இயங்கி வந்த இந்திய இசைப் பிரிவை 1 மில்லியன் டாலர் நிதியில் தனித்துறையாக பல்கலைக்கழகம்விரிவாக்கியுள்ளது.
இந்தத் துறையை காந்தி ஜெயந்தி தினத்தன்று சிதார் கலைஞர் சுஜாத் கான் தனது இசை நிகழ்ச்சியுடன் துவக்கி வைத்தார்.அவருடன் அபிமான் கெளசல் தபேலா வாசித்தார்.
அபீர் பைரவி ராகத்தில் இசையைத் துவக்கிய இருவரும் காந்திஜிக்கு மிகப் பிடித்தமான வைஷ்னவ ஜனதோவில் பாடலில்முடித்தனர்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் கடந்த 1996ம் ஆண்டு முதல் சிதார் கற்றுத் தந்து வரும் பிரபலமான விலாயத் கானின் மகன் தான்இந்த சுஜாத் கான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications