கைதாகிறார் அரசு ஊழியர் சங்க தலைவர் சூர்யமூர்த்தி?
கடலூர்:
தமிழ்நாடு அரசு ஊழியர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவரான சூர்யமூர்த்தி மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனால் அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
இவர் கடலூர் பொது ஊழியர் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தின் தலைவராக இருந்த காலத்தில் ரூ. 6 கோடி வரை மோசடிசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.போலி ஆவணங்கள் தயாரித்தும், போலியான ஆட்கள் பெயரிலும் இந்தச் சங்கத்தில் சூர்யமூர்த்தி பண மோசடி செய்துள்ளதாகசங்கத்தின் முன்னாள் தலைவரான கங்கை முத்து கடலூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரிடம் புகார் தந்தார்.
ஆனால், சூர்யமூர்த்தியின் அரசு ஊழியர் சங்கம் அரசுக்கு ஜால்ரா அடித்து வந்ததால் இவர் மீது போலீசார் நடவடிக்கைஎடுக்கவில்லை. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் கங்கை முத்து.
இதை விசாரித்த நீதிமன்றம், கங்கை முத்துவின் புகாரைப் பதிவு செய்து முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமா கடலூர்போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து சூர்யமூர்த்தி மீது இப்போது காவல்துறையின் ஊழல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதைத் தவிர அவர் மீது மேலும் 7 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் விரைவில் சூர்யமூர்த்திகைதாகலாம் என்று தெரிகிறது.
கடந்த ஆண்டில் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியபோது திடீரென அரசுக்கு ஆதரவான நிலையை எடுத்தவர் சூர்யமூர்த்திஎன்பது குறிப்பிடத்தக்கது. அன்றிலிருந்து தொடர்ந்து அரசை ஆதரித்து வருகிறார்.
வருமானத்தை மீறி சொத்து குவித்துள்ளதாக ஏற்கனவே இவர் மீது ஒரு புகார் உள்ளது. இருப்பினும் அரசுக்கு ஜால்ரா போட்டதால்தப்பி வந்தார். இப்போது நீதிமன்ற உத்தரவால் சிக்கலில் மாட்டியுள்ளார்.
இந் நிலையில் தன் மீது தவறான வழக்குப் போட்டு அரசு ஊழியர் ஒன்றியத்தை உடைக்க முயற்சி நடப்பதாகவும், வரும் 22ம் தேதிதான் நடத்தவிருந்த அரசு ஊழியர் மாநாட்டைத் தடுக்க முயற்சிப்பதாகவும் சூர்யமூர்த்தி கூறியுள்ளார்.
இந்த மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதாவும் பங்கேற்க இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர் பங்கேற்பாரா என்பதுஇப்போது சந்தேகமாக உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications