எஸ்ஆர்பி வீட்டில் ரகசிய கேமராவா? இளங்கோவன் கிண்டல்
சென்னை:
ரகசிய கேமரா வைத்து கண்காணிக்கும் அளவுக்கு எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்தின் வீட்டில் என்று இருக்கிறது என்று மத்தியஅமைச்சர் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கட்சிக்குள் இதுவரை வாசனுடன் மட்டுமே மோதி வந்த இளங்கோவன் இப்போது எஸ்.ஆர்.பியையும் பிடித்துக் கொண்டுள்ளார்.கொங்கு மண்டலத்தில் கட்சியில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்பதில் எஸ்.ஆர்.பி. மற்றும் இளங்கோவனுக்கு இடையே மோதல்மூண்டுள்ளது.மூத்தவரான எஸ்.ஆர்.பி. சட்டப் பேரவைக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகி, இளையவர்களுக்கு வழி விட வேண்டும்என்று இளங்கோவன் கூறியுள்ளார். தனது பதவிக்கு வேட்டு வைக்கும் இந்த முயற்சியில் டெல்லியின் ஆசியும் இருக்குமோ என்றுசந்தேகிக்கும் எஸ்.ஆர்.பி. இதுவரை இளங்கோவனுக்கு பதில் ஏதும் தராமல் மெளனம் காத்து வருகிறார்.
இந் நிலையில் தான் எஸ்ஆர்பி வீட்டில் கொள்ளை நடந்தது. ஆளும் தரப்பின் ஆசியோடு, போலீஸ் துணையோடு நடந்திருக்கும்கொள்ளை இது என்று கருதும் எஸ்.ஆர்.பி. தனது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை எடுத்துச் செல்லவும், ரகசிய கேமராஅல்லது ஒட்டு கேட்பு கருவி வைப்பதற்காகவே பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
(போலீசாரால் தேடப்பட்டு வரும் கராத்தே தியாகராஜன் சில ஆவணங்களை எஸ்ஆர்பியிடம் தந்துவிட்டுத்தலைமறைவாகியுள்ளதாக ஆளும் தரப்பு கருதுகிறது. காங்கிரசில் இருந்தபோது எஸ்ஆர்பியின் வலது கரமாக இருந்தவர் தான்கராத்தே என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னணியிலேயே தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதாக எஸ்ஆர்பி கருதுகிறார்.)
இந் நிலையில் எஸ்ஆர்பியின் பரபரப்பான புகாரை கிண்டலடித்துள்ளார் இளங்கோவன்.
நிருபர்களை சந்தித்த இளங்கோவவனிடம், தமிழக காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பட்டியலில் உங்களது ஆதரவாளர்கள்ஓரங்கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறதே என்று கேட்டபோது,
அந்தப் பட்டியலைத் தயாரிக்க என்னிடம் ஒரு பட்டியலை மேலிடம் கேட்டது. நானும் கொடுத்துள்ளேன். அதிஸ் எல்லாதரப்பினரும் இடம் பெறுவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தனது வீட்டில் திருடர்கள் நுழைந்தார்களா அல்லது காவலர்களே நுழைந்தார்களா என்பது சந்தேகமாகஉள்ளதாகவும், தனது வீட்டில் ரகசிய கேமரா வைத்து கண்காணிக்க முயற்சி நடப்பதாகவும் எஸ்ஆர்பி கூறியுள்ளார்.
அந்த அளவுக்கு அவரது வீட்டில் என்ன ஆதாரம் இருக்கிறதோ? என்ன ஆவணங்கள் இருக்கப் போகிறதோ தெரியவில்லை. இதுகுறித்து எஸ்ஆர்பியிடம் கேட்டுவிட்டுச் சொல்கிறேன் என்றார் கலகலவென சிரித்தடியே.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications