ராமேஸ்வரம் கோவிலில் லஞ்ச ஓழிப்பு போலீசார் சோதனை

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்:

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் புனித தீர்த்த கிணறு அனுமதி டிக்கெட் முறைகேடாக விற்பனை செய்யப்படுவதாகஎழுந்த புகாரை அடுத்து கோவிலில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்ட் நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.91,000 பறிமுதல்செய்யப்பட்டது.

22 தீர்த்த கிணறுகளில் நீராட தேவஸ்தானம் ரூ. 7 மட்டும் கட்டணமாக நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் கோவில் ஊழியர்கள்இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவதில்லை. இதனால் சுற்றுலா பயணிகளிடம் வெளி நபர்கள் ரூ. 100, ரூ. 1,000 என்றுடிக்கெட்டுகளை இஷ்டம் போல விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக வந்த புகார்களையடுத்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி மோகன் தலைமையில் மதுரை, ராமநாதபுரம்,சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை ராமேஸ்வரம்கோயிலில் திடீர் சோதனை நடத்தியது.

இதில் 4,000 போலி டிக்கெட்டுகள், ரூ. 91,000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டன.

இது தவிர, கோவிலின் அலுவலகத்தில் ரூ. 1 லட்சம் வரை பணம் காணாமல் போயிருப்பதும் இந்தச் சோதனையின்போதுதெரியவந்தது. இது தொடர்பாக தேவஸ்தான காவலர் ராமசாமி என்பவரை போலீசார் கைது செய்து விசாரனை நடத்திவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+