ஜெயேந்திரர்: மாஜிஸ்திரேட் நிர்பந்திக்கப்பட்டாரா?- உச்ச நீதிமன்றம் கேள்வி
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் கோர்ட் விடுமுறை தினத்தன்று ஜெயேந்திரருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கைதாக்கல் செய்யப்பட்டது ஏன்? விடுமுறை நாளில் மாஜிஸ்திரேட் எதற்கு நீதிமன்றம் வந்தார்? அவரை யாராவதுநிர்பந்தித்தார்களா? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் தீபாவளி தினத்தன்று ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் புயல் வேகத்தில்போலீஸ் விசாரணை நடந்தது. தர்மபுரி மாணவிகள் பஸ் எரிப்பு வழக்கு விசாரைணயை அதிமுக அரசு நடத்திய வேகத்தோடுஒப்பிட்டால் இது சூப்பர் சானிக் ஜெட் வேகத்தில் நடந்தது.இந்த வழக்கில் ஜெயேந்திரர் மீது பக்ரீத் தினத்தன்றே காஞ்சி நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இத்தனைக்கும் அன்று நீதிமன்றத்துக்கு விடுமுறை தினமாகும்.
இந் நிலையில் இந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடிக் குறுக்கீடு இருப்பதால் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றவேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெயேந்திர் மனு தாக்கல் செய்துள்ளார்.
தலைமை நீதிபதி லஹோத்தி, நீதிபதி மாத்தூர் ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போதுஜெயேந்திரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாரிமன் கூறுகையில்,
சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் மீது முதல்வர் ஜெயலலிதா தனிப்பட்ட கவனம் செலுத்தினார். பலஅறிக்கைகளை வெளியிட்டு அவரது கைதை நியாயப்படுத்தி, அவர் தான் கொலையாளி என்ற பிரமையை ஏற்படுத்த முயன்றார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் 16 பேரை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் அடைத்தது. ஆனால், அவர்கள்அனைவரையும் சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததுடன், தமிழக அரசின் செயலையும் கண்டித்தது.
16 பேரும் ஜாமீனில் வெளிவரக் கூடாது என்பதற்காகத் தான் குண்டர் சட்டத்தை தமிழக அரசு பயன்படுத்தியது.
கொலையாள சங்கரராமனின் மனைவிக்கு ரூ. 5 லட்சம் தந்தது தமிழக அரசு. அடுத்த 2 நாட்களில் அவரை வைத்து குற்றவாளிகள்அணி வகுப்பை நடத்தினர். அதில் 2 பேரை அவர் அடையாளம் காட்டினார்.
பக்ரீத் தினத்தன்று நீதிமன்றத்துக்கு விடுமுறை. ஆனால், அந்த தினத்தன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டார்.அன்று முழுவதும் அவர் நீதிமன்றத்திலேயே காத்திருக்க வைக்கப்பட்டார். அன்றே அவசர அவசரமாக குற்றப் பத்திரிக்கைதாக்கல் செய்யப்பட்டது.
அதே தினத்தில் குற்றப் பத்திரிக்கையை வரதராஜ பெருமாள் கோவிலில் வைத்து பூஜை செய்தார் விசாரணை அதிகாரியானபிரேம் குமார். பின்னரே அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் என்றார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி லஹோத்தி, விசாரணை அதிகாரி எங்கு வேண்டுமானாலும் போகட்டும். ஆனால்,விடுமுறை நாளில் மாஜிஸ்திரேட் எதற்கு நீதிமன்றம் வந்தார்? அரசுத் தரப்பு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் போவதுஅவருக்கு எப்படித் தெரியும்? நீதிமன்றத்துக்கு வர அவர் நிர்பந்திக்கப்பட்டாரா? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய நாரிமன், இதற்கு தமிழக அரசு தான் விளக்கம் தர வேண்டும். ஜெயேந்திரர் மீதான வழக்கை விமர்சித்துஎழுதிய குருமூர்த்தி மீதும் வழக்க போட்டுள்ளார்கள். அசோக் சிங்கல் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜெயேந்திரரைஆதரித்த வழக்கறிஞர்கள் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது
தமிழகத்தில் இத்தகைய அசாதாரணமான சூழல் நிலவுவதால், சங்கரராமன் கொலை வழக்கை அங்கு விசாரிப்பது நியாயமாகஇருக்காது, நீதி கிடைக்காது. போலீஸ் துறையையும் ஜெயலலிதாவே கையில் வைத்திருப்பதால் நியாயமான விசாரணைநடக்காது. எனவே வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றார்.
அப்ரூவரான ரவிசுப்பிரமணியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சாந்தி பூஷன்,
இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோருவது தமிழக நீதித்துறையின் மீது களங்கம் கற்பிப்பது போலாகும். எனவேவழக்கை தொடர்ந்து தமிழகத்திலேயே நடத்த வேண்டும் என்றார்.
தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தாவன் இன்று ஆஜராகி வாதாடினார். அப்போது விடுமுறை தினத்தன்று ஏன்ஜெயேந்திரர் வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கலானது என்பதற்கு புது விளக்கம் தந்தார். அவர் பேசுகையில்,
ஜெயேந்திரர் வழக்குக்காக நீதிமன்றம் திறக்கப்படவில்லை. வேறு ஒரு வழக்கு விசாரணைக்காகத் தான் திறந்து இருந்தது. அன்றுஇந்த வழக்கிலும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications