மலேசியா: தூதரகங்களுக்கு வந்த மர்ம பார்சல்
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்:
மலேசியாவில் உள்ள கனடா, சிங்கப்பூர், ஜப்பான், ஜெர்மனி, தாய்லாந்து உள்பட பல்வேறு நாட்டு தூதரகங்களுக்கும் மிரட்டல்கடிதத்துடன் கூடிய மர்ம பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.இஸ்லாமிய உலகுக்கு எதிரான அநீதிக்கு பழிக்குப் பழி வாங்குவோம் என்ற கடிதத்துடன் அந்த பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த பார்சல்களில் ஆந்த்ராக்ஸ் உள்ளிட்ட உயிரியல், வேதியியல் ரசாயனம் ஏதும் இருக்கலாம் என்ற பீதி பரவியதால்தூதரகங்களில் பெரும் பதற்றம் நிலவியது. ஜப்பானிய தூதரகம் முழுமையாகவே காலி செய்யப்பட்டது.
பார்சலுடன் மிரட்டலும் வந்திருப்பதால் கோலாலம்பூரில் உள்ள அனைத்து வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications