பொன்னையனின் அநாகரீகம்: தயாநிதி தாக்கு
சென்னை:
இலவச சைக்கிள் திட்டத்துக்காக மத்திய அரசிடம் ரூ. 20 கோடி பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீண்டும்கூறியுள்ளார்.
தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தரப்படும் இலவச சைக்கிள் திட்டத்துக்கு மத்திய அரசுதான் நிதியுதவி செய்கிறது என மாறன் கூறியிருந்தார்.இதை மறுத்து மந்திரி பொன்னையன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில்,
தமிழக அரசின் திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன என்ற அடிப்படை கூட அறியாத மாறன் எல்லாம் திடீர் மந்திரிஆகிவிட்டார். இது எங்கள் தங்கத் தலைவி கொண்டு வந்த புரட்சிகரத் திட்டம்.
சம்பந்தமில்லாத விஷயங்களில் மாறன் தலையிடாமல் இருப்பதே அவருக்கு நல்லது என்று கூறப்பட்டிருந்தது. மேலும் திமுகதலைவர் கருணாநிதியையும் தாக்கியிருந்தது அந்த அறிக்கை.
இதற்கு பதில் கூறி மாறன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
நான் கூறிய கருத்துக்கு அமைச்சர் பதிலளிப்பதற்குப் பதிலாக கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டியிருக்கிறார்.எனக்கு பதில் சொல்லாமல், தேவையில்லாமல் கருணாநிதியை ஏசியிருக்கிறார். அவரது வயதையும் கூறி விமர்சித்துள்ளார்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ரூ. 20 கோடியைதமிழக்குக்கு வழங்கியுள்ளது. இதில் ரூ. 6 கோடி மானியம். ரூ. 14 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதி உதவியைக் கேட்டு தமிழக அரசின் ஆதி திராவிட நலத்துறை ஆணையர் மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதம்,ஆதாரமாக உள்ளது. 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நிதி மத்திய அரசால் தமிழகத்துக்கு தரப்பட்டது.
இதிலே நான் என்ன தவறுதலாகப் பேசிவிட்டேன் என்று பொன்னையன் சாடுகிறார்?. மாநில சுயாட்சியையே நான்கேள்விக்குறியாக்கிவிட்டதாக பொன்னையன் புலம்ப இதில் என்ன இருக்கிறது?. மத்திய அரசும் இலவச சைக்கிள் திட்டத்துக்குஉதவியது என்ற உண்மையைக் கூறினால் ஏன் அமைச்சர் கதறுகிறார்?
என்னைப் பற்றிய அமைச்சரின் அர்ச்சனையே, அவரது அநாகரீகப் பண்பாடுகளில் ஒன்றாகவே கருத வேண்டியிருக்கிறது என்றுகூறியுள்ளார் தயாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications