திருப்பதி பிரமோற்சவம்: லட்சக்கணக்கில் பக்தர்கள்
திருப்பதி:
திருப்பதி வெங்கடேஸ்வரர் ஆலய நவராத்திரி பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.கோவிலின் தங்க துவஜஸ்தம்பத்தில் கருட கொடி ஏற்றப்பட்டதோடு இந்த 9 நாள் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. பின்னர்சுவாமி பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளினார்.
சுவாமிக்கு போர்த்துவதற்காக ஆந்திர மாநில அரசின் சார்பில் முதல்வர் ராஜசேகர ரெட்டி பட்டு வஸ்திரங்களை வழங்கினார். இந்தவஸ்திரம் கருட சேவை தினத்தன்று இறைவனுக்கு போர்த்தப்படும்.
இந்த ஒன்பது நாள் விழாவின்போது தினமும் காலையிலும் இரவிலும் சுவாமியின் சிலை கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில்பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இன்று பெருமாள சேஷ வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவந்தார். இரவில் ஊஞ்சல் சேவை நடக்கிறது. அதைத் தொடர்ந்து ஹம்ச வாகனத்தில் சுவாமி உலா வருவார்.
பிரமோற்சவ விழாவின் நிறைவு தினமான 11ம் தேதி தேரோட்டம் நடக்கும். பிரமோற்சவத்தையொட்டி லட்சக்கணக்கானபக்தர்கள் திருப்பதியில் குவிந்துள்ளனர்.
இதையடுத்து திருப்பதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த விழாவையொட்டி 40,000 பேருக்கு அன்னதானம் வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
பெண் நாவிதர்கள் நியமனம்:
இதற்கிடையே ஏழுமலையான் கோயிலில் பெண் பக்தர்களுக்கு மொட்டை அடிக்க பெண் நாவிதர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications