தொடை நடுங்கி அமெரிக்கர்கள்: டிரஸ் அவிழ்ப்பு சோதனையால் பாஜக முதல்வர் கோபம்
போபால்:
அமெரிக்கர்களும் பிரிட்டிஷாரும் பெரும் பயந்தாங்கொள்ளிகள் என்று மத்தியப் பிரதேச முதல்வர் பாபுலால் கெளர் கூறியுள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த கெளர், கடந்த ஒரு வார காலமாக அமெரிக்கா, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்தார். அன்னியமுதலீட்டாளர்களைச் சந்திக்க அந் நாடுகளுக்குச் சென்ற அவருக்கு போன இடமெல்லாம் உடை களைப்பு சோதனை நடந்தது.
பாஜக ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸையே அமெரிக்க விமான நிலையத்தில் அதிகாரிகள்உடைகளை அகற்றி சோதனையிட்டனர். அது போல பாபுலால் கெளரையும் டிரஸ்ஸை கழற்றச் சொல்லி கடுப்பேற்றினர். தான் ஒருமாநிலத்தின் முதல்வர் என்று சொன்னபோதும் அதை அதிகாரிகள் காதில் வாங்கவில்லையாம்.
நியூயார்க், சிகாக்கோ, லண்டன் என அவர் போய் இறங்கிய விமான நிலையங்களில் எல்லாம் இந்த டிரஸ் அவிழ்ப்பு நடக்க,எரிச்சலுடன் இந்தியா திரும்பி வந்துள்ள கெளர், வந்த வேகத்திலேயே அமெரிக்கர்காவையும் இங்கிலாந்தையும் தாக்கஆரம்பித்துவிட்டார்.
அவர்களை பொண்டுகப் பயல்கள், பயந்தாங் கொள்ளிகள் என்று அர்ச்சனை செய்த கெளர் கூறுகையில், தீவிரவாதத்தாக்குதல்களையடுத்து அவர்கள் தொடை நடுங்கிக் கிடக்கிறார்கள். இப்படிப்பட்ட பயந்தாங்கொள்ளிப் பயல்களை நான் என்வாழ்க்கையில் பார்த்தது இல்லை.
நீங்கள் இந்தியரைப் போல இருந்தாலே, லேசாக தாடி வைத்திருந்தாலோ, அல்லது நீங்கள் முஸ்லீமாக இருந்தாலே போச்சு. உடனேஉங்களை தோண்டித் தோண்டி சோதனை போட்டு விடுகிறார்கள்.
முதலில் சட்டையைக் கழற்றச் சொன்னார்கள். அதைச் செய்தேன். பின்னர் அப்படியே சாக்ஸ் பக்கம் வந்துவிட்டார்கள். அதையும்கழற்றச் சொன்னார்கள். காது ஓட்டைக்குள் கூட எட்டிப் பார்க்கிறார்கள் அந்த பயந்தாங்கொள்ளிகள் என்றார் வெறுப்புடன்.
இன்னும் கூட தன்னைச் சந்திக்கும் முக்கியஸ்தர்களிடம் எல்லாம் அமெரிக்காவையும் இங்கிலாந்தையும் திட்டிக்கொண்டிருக்கிறாராம் கெளர். ரொம்பத்தான் டார்ச்சர் பண்ணிட்டாங்க போலிருக்கு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications