குஷ்பு விவகாரத்தில் விஜயகாந்த்: ஒட்டா-உறவா-பாசமா?- மாஜி எம்பி கேள்வி
சென்னை:
குஷ்பு விவகாரத்தில் விஜயகாந்த் ஒதுங்கிக் கொள்வது ஒட்டா-உறவா-பாசமா என்று தெரியவில்லை எனகாங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அன்பரசு கூறியுள்ளார்.
முன்னாள் எம்.பியான அன்பரசு இப்போது காங்கிரஸ் கட்சியில் ஓரங்கட்டப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ்தலைவர் பதவியைப் பிடிக்க பல ஆண்டுகளாக அவர் முயன்று வந்தாலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.இந் நிலையில் கட்சியில் தன்னை நிலை நிறுத்துக் கொள்ள காங்கிரஸ் கண்டுகொள்ளாத குஷ்பு விஷயத்தை இவர்மட்டும் கையில் எடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் திருமாவளவனுடன் இணைந்து போராடுவது என அவர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாகஅன்பரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குஷ்பு தமிழ் பெண்களின் கற்பு பற்றி தவறாக பேசிவிட்டு கவலையின்றி தமிழ்நாட்டில் நடமாடுகிறார். இதேபோன்று வட மாநிலத்துப் பெண்களைப் பற்றி தவறாக பேசிவிட்டு தமிழகத்தைச் சேர்ந்த ஹேமமாலினியால் அங்குநிம்மதியாக இருக்க முடியுமா?
இந்த உணர்வு தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு ஏன் வரவில்லை என்று டெல்லி வாழ் தமிழர்கள் என்னைகேட்கிறார்கள். வட இந்திய பெண்கள் கூட குஷ்பு பேசிய பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.
மன்னிப்பு கேட்டு விட்டால் இந்த பிரச்சினை ஓய்ந்து விடும் என்று குஷ்பு நினைக்கலாம். ஆனால் இந்தபிரச்சினையை தமிழர்களாகிய நாம் சாதாரணமாக நினைத்து விட்டுவிடக்கூடாது. குஷ்புவுக்கு சரியான பாடம்புகட்ட வேண்டும்.
குஷ்பு விவகாரத்தில் விஜயகாந்த் ஒதுங்கிக் கொள்வது ஒட்டா-உறவா-பாசமா தெரியவில்லை.
இந்தப் பிரச்சனை தமிழர்களுக்கு சவால் விடும் பிரச்சினையாக இருப்பதால், குஷ்புவை எதிர்த்து போராட்டம்நடத்தி வரும் தொல். திருமாவளவன் போன்றோருடன் நானும் இணைந்து போராடுவேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications