ஜெயலட்சுமி, எஸ்பியின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
திண்டுக்கல்:
எஸ்பி ராஜசேகரின் மனைவி தற்கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலட்சுமி மற்றும்ராஜசேகரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
ராஜசேகரின் மனைவி விசாலாட்சி தற்கொலை வழக்கில் இந்த இருவருமே தலா 7 ஆண்டு சிறை தண்டனை பெற்றுதிருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் தங்களுக்கு ஜாமீன் வழங்குமாறு ஜெயலட்சுமி மற்றும் ராஜசேகர் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன்மனுவை விசாரித்த திண்டுக்கல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி கலையரசன் 2 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடிசெய்தார்.
ஜெயலட்சுமிக்கு பிடிவாரண்டு
இதற்கிடையே 4 மோசடி வழக்குகளில் ஜெயலட்சுமிக்கு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.
ஜெயலட்சுமி, இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், மலைச்சாமி ஆகியோர் மீது மதுரை தலைமை ஜுடிசியல்மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் சிபிஐ மோசடி வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் இதுவரை ஜெயலட்சுமி கைது செய்யப்படவில்லை.
நேற்று இந்த 4 மோசடி வழக்குகளும் விசாரணைக்கு வந்த போது இளங்கோவன், மலைச்சாமி ஆகியோர் நேரில்ஆஜரானார்கள்.
எஸ்பி மனைவி தற்கொலை வழக்கில் கைதான ஜெயலட்சுமி திருச்சி சிறையில் இருப்பதால் அவர் ஆஜராகவில்லை.இதை தொடர்ந்து அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications