மாபெரும் பூகம்பம்: குலுங்கியது வட இந்தியா
டெல்லி:
இன்று காலை இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மிகப் பெரும் பூகம்பத்தால் காஷ்மீர், டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான்,உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வட இந்தியாவின் பல மாநிலங்களும் குலுங்கின.
இதில் காஷ்மீர் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.ரிக்டர் அளவு கோளில் 7.4 என்ற அளவுக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று காலை 9.20க்கு ஏற்பட்ட இந்த அதிக சக்தி வாய்ந்தபூகம்பத்தால் நாட்டின் வட பகுதி குலுங்கியது. இதில் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
வீடுகள் பயங்கரமாக அதிர்ந்ததால் மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். பாகிஸ்தானிலும் ஆப்கானில்தானிலும் 9.00 மணியளவில்இந்த பயங்கரமான பூகம்பம் தாக்கியது. இந்த பூகம்பம் பாகிஸ்தான் முழுவதுமே உணரப்பட்டுள்ளது. பூகம்பத்தின் மையம் பாகிஸ்தான்ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முஸாபராபாத் நகரில் இருந்தது.
பல இடங்களில் பூகம்பம் 1 நிமிடம் முதல் பல நிமிடங்கள் வரை நீடித்தது. ஜம்மூவில் பல கட்டடங்கள் உடைந்து விழுந்துள்ளன. இந்தநிலநடுக்கத்தால் காஷ்மீரில் தொலைத் தொடர்பு, மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
அதே நேரத்தில் ராஜஸ்தான், பஞ்சாபில் பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை. பஞ்சாபில் குழந்தை பலியாகியுள்ளது.ராஜஸ்தானில் தொடர்ந்து ஆப்டர் ஷாக் எனப்படும் பூகம்பத்தைத் தொடர்ந்த சிறு நில நடுக்கங்கள் ஏற்பட்டவண்ணம் உள்ளது.
தெற்கு டெல்லியில் சில வீடுகள் சேதமடைந்துள்ளன. குஜராத்தில் அகமதாபாத் உள்பட 25 மாவட்டங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.பல இடங்களில் கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அதே போல ஹரியாணாஸ உத்தரப் பிரதேசத்திலும் இந்த நடுக்கம் ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications